|
|
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 1.38சதவீதத்தினர் பார்வை இழந்து வருபவர்கள் பட்டியலில் உள்ளனர்.1986-89-ம் ஆண்டில் மத்திய அரசும்,உலக சுகாதார நிறுவனமும் சேகரித்த புள்ளி விவரத்தில் நாட்டின் மக்கள் தொகையில் 1.49சதவீதம் பேர் பார்வை இழந்து வருபவர்கள் என்பது தெரிய வந்தது. கண்பார்வை இழப்புக்கு கண்புரை நோய்,பார்வை குறைபாடுகள்,கண் நீர் அழுத்தம்,சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிப்பு,கருவிழி பாதிப்பு,இதர நோய்கள் பார்வை இழப்பின் முக்கிய காரணங்கள் என்கின்றனர் டாக்டர்கள். கண்புரை நோய் இன்று பலரை பாதிக்க செய்துள்ளது. இந்த நோயினால் 80சதவீதம் பேர் பார்வை இழந்து வந்தனர். இதை மத்திய அரசும்,உலக சுகாதார நிறுவனமும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து 55சதவீதம் ஆக குறைத்து உள்ளது. பார்வை இழப்பை தடுப்பதற்காக மட்டும் ஆண்டு தோறும் ரூ.320கோடி முதல் ரூ.425கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.உலக அளவில் பார்வை இழப்பால் நேரடியாக ஆண்டு தோறும் 25மில்லியன் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லை அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் ராமகிருஷ்ணன் இதுபற்றி கூறியதாவது:- உலகில் 45மில்லியன் மக்கள் பார்வை இழந்து தவிக்கின்றனர். இதில் 60சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஒவ்வொரு 5வினா டிகளில் ஒருவர் பார்வை இழந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் 7மில்லியன் மக்கள் பார்வை இழந்து வருகின்றனர். உலகில் பார்வை இழந்தவர்களில் 5பேர்களில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார். நம்நாட்டில் 11ஆயிரம் கண்டாக்டர்கள் உள்ளனர். இந்திய மக்கள் தொகையை ஒப்பிடும் போது 1லட்சம் பேருக்கு ஒரு கண்டாக்டர் உள்ளார். நகர்ப்புறங்களில் 20ஆயிரம் பேருக்கு ஒரு கண்டாக்டரும்,கிராமப் புறங்களில் 2லட்சம் பேருக்கு ஒரு கண்டாக்டரும் உள்ளனர். வரும் 2020-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் பார்வையோடு இருக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக அளவில் எல்லோருக்கும் பார்வை நலம் "2020"என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலக கண்ணொளி தினமான நேற்று முதல் உலகம் முழுவதும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். |
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223719595&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment