Saturday, October 11, 2008

ஒரிஸ்ஸா கலவரம் ஆடியோவில் கேட்க‌

ஒரிஸ்ஸா கலவரம்
 
ஒரிசாவின் உண்மை  நிலையை அறிந்து கொள்ள ஆடியோ
 
 
இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் வாரக் கணக்கில் இந்து அமைப்புகளுக்கும், கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நீடித்து வருகின்றன.

கிறிஸ்தவ தேவாலயங்கள் பல சேதப்படுத்தப்பட்டுள்ளன. பலர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான்வர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

வன்முறைக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன

02/10/2008

இந்த நீடிக்கும் மதக் கலவரங்களின் பின்னணி என்ன என்று ஒரிஸ்ஸாவில் 30 ஆண்டுகளாக செயற்பட்டுவரும் தொண்டு நிறுவனமான கிராம வளர்ச்சி சுகாதார மையத்தின் இயக்குநரான வில்லியம் ஸ்டான்லி தமிழோசையில் தகவல் வெளியிட்டார்.

வில்லியம் ஸ்டான்லி செவ்வி (கிறிஸ்தவர் என்ற பெயரில் உள்ள ஒரு சுரணை இல்லாதவர்)

04/10/2008

ஒரிஸ்ஸா மாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் காந்தமால் மாவட்டத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களையும் திப்புக்குள்ளானவர்களையும் இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் பேரவையின், நீதி மற்றும் அமைதிக்கான மனித மேம்பாட்டு வளர்ச்சி மையத்தின் செயலர் அருட்தந்தை நித்திய சகாயம் அவர்கள் நேரில் சந்தித்து திரும்பியிருக்கிறார்.

ஒரிஸ்ஸா கலவரங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிப்பதற்கு, பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் தான் காரணம் என்று கிறிஸ்தவ அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் வேதாந்தம் பதில் தெரிவித்தார்.

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails