|
|
"நலிவடைந்த வங்கிகளுக்கு என்ன தான் நிதியுதவி அளித்தாலும் சர்வதேச அளவில் நிதிச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை தொடரவே வாய்ப்பு உள்ளது" என,பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்ற பால் கிரக்மென் கூறினார். இந்த ஆண்டின் பொருளாதார நோபல் பரிசு பெற்றிருப்பவர் பால் கிரக்மென்.இவர் அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர்.நியுயார்க் டைம்ஸ் இதழில் பொருளாதாரக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டு பொருளாதார மந்தநிலை இன்னும் மோசமான நிலைக்குத் தான் செல்லும் என்பது இவரது வாதம்.இவர் நேற்று செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்.நலிவடைந்த வங்கிகளை தூக்கி நிறுத்த பிரிட்டன் அரசு அறிவித்துள்ள நிதயுதவியால் ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்த மந்தநிலை நீண்ட நாட்களுக்குத் தொடரும். தொழில்துறை தேக்கம் தொடரும்.முன்,நான் மட்டும் அமெரிக்க அதிபர் புஷ் மேற்கொள்ளும் பொருளாதாரக் கொள்கையை குறைகூறுபவனாகக் கருதப்பட்டேன்.இப்போது அமெரிக்க மக்கள் பலரும்,அவர் பின்பற்றிய கொள்கை தவறு என்று கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.இவ்வாறு பால் கிரக்மென் கூறினார் |
No comments:
Post a Comment