|
|
கிரீஸ் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இன்று அதிகாலை கடும் பூகம்பம் ஏற்பட்டது. எனினும் இந்த பூகம்பம் காரணமாக உயிரிழப்போ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. கிரீஸ் தலைநகர் ஏதென்சின் வடகிழக்கே அல்கிதா என்ற இடத்திற்கும், இவியா தீவிற்கும் இடையே கடலுக்கு அடியில் இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்கு பின் 2 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அது கூறியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ஏதென்ஸ் பகுதியில் உணரப்பட்டதாகவும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பீதியுடன் வெளியேறியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223976309&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment