Saturday, October 11, 2008

தெண்டுல்கர் சாதனையை பாண்டிங் முறியடிப்பார் லாரா சொல்கிறார்

தெண்டுல்கர் சாதனையை பாண்டிங் முறியடிப்பார் லாரா சொல்கிறார்
lankasri.comடெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் பிரைன் லாரா.வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் 131டெஸ்டில் 11,953 ரன் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தெண் டுல்கர் 11,877ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.லாராவின் சாதனையை முறியடிக்க தெண்டுல்கருக்கு இன்னும் 76 ரன் தேவை.

பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்டில் அவர் இந்த சாதனையை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று தொடங்கிய பெங்களூர் டெஸ்டில் பாண்டிங் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 123 ரன்கள் எடுத்ததால் டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 6-வது இடத்தில் இருந்த கவாஸ்கரை
முந்தினார். தற்போது கவாஸ்கர் 7-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.

தெண்டுல்கரின் சாதனையை பாண்டிங் ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று லாரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தெண்டுல்கருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பெங்களூர் டெஸ்டில் எனது சாதனையை அவர் முறியடிப்பார் என்று நம்புகிறேன். ஏற்கனவே அவர் கவாஸ்கர், ஆலன்பார்டர் சாதனைகளை முந்தினார். அவரது சாதனைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் தெண்டுல்கரும் ஒருவர்.

பாண்டிங்கும் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கிரிக் கெட்டில் மாறி வரும் தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்பவர். இனிவரும் காலங்களில் தெண்டுல்கரின் சாதனைகளை பாண்டிங் ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும்.

இந்திய அணியில் 5 சீனியர் வீரர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றால் பாதிப்பு ஏற்படும். 1990-ம் ஆண்டில் விவியன் ரிச்சர்ட்ஸ், கிரினிட்ஜி, மார்ஷல் ஓய்வு பெற்றதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails