|
பிரைன் லாராவின் உலக சாதனையை சச்சின் டெண்டுல்கர் முறியடிக்க காத்திருப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள சச்சின் டெண்டுல்கர்,டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாராவின் சாதனையை நெருங்கியுள்ளார். நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் அவர் ஆடிக் கொண்டிருந்த போது லாராவின் சாதனையை முறியடிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.அதற்கேற்ப சிறப்பாக ஆடி வந்த டெண்டுல்கர் 49 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராதவிதமாக ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக அவர் லாரா சாதனையை முறியடிக்க முடியவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. லாராவின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னமும் 15 ரன்கள் தேவை. இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் இந்த 15 ரன்களை எடுத்து லாரா சாதனையை முறியடிக்க ஆர்வத்தோடு காத்திருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்மேலும் கூறியிருப்பதாவது: மொஹாலி டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் அரை சதம் அல்லது சதம் அடித்து லாரா சாதனையை முறியடித்தால் சிறப்பாக இருக்கும். எப்படியும் சாதனை, சாதனை தான். எனவே 15 ரன்களை எடுத்து இந்த சாதனையை முறியடித்தாலும் அது போற்றக்கூடியதுதான்.சச்சின் இந்த சாதனையை முறியடிப்பதற்காக நான் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.15ரன்களை எடுத்த பிறகு அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி சதம் அடித்தால் அது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார் |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223973116&archive=&start_from=&ucat=4&
No comments:
Post a Comment