! |
1990ஆம் ஆண்டுகளில் உதித்த சச்சின்,லாரா என்ற இந்த மிகப்பெரிய கிரிக்கெட் ஆளுமைகளில் லாராவின் சாதனை மிகுந்த சகாப்தம் முடிவுக்கு வந்தது,சச்சினின் சாதனை சகாப்தம் இன்னமும் தொடர்கிறது. இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் இன்னமும் 77ரன்கள் எடுத்தால் லாராவின் 11,953ரன்கள் என்ற உலக சாதனையை முறியடித்து உலகிலேயே அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற புதிய உச்சத்தை எட்டவுள்ளார். சமகால அல்லது சம திறன் படைத்த வீரர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்குள் ஊறிய ஒரு விஷயம்.ஒரு காலத்தில் கபில்தேவ்,இம்ரான்,கபில்தேவ்-இயன் போத்தம்,கவாஸ்கர்-பேரி ரிச்சர்ட்ஸ் என்று நாம் பல வேளைகளில் ஒப்பிட்டுப் பார்த்து நண்பர்களிடம் தகராறு கூட ஏற்பட்டிருக்கும். சச்சினின் இந்த உலக சாதனையை முன்னிட்டு,முன்பு ஓங்கியிருந்த,ஆனால் தற்போது ஓய்ந்து போன சச்சின்-லார ஒப்பிட்டை நாம் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்ப்போம்.ஆஸ்ட்ரேலியா தற்போது இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளதால். ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக சச்சின்,லாரா ஆகியோரது ரன் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. 131டெஸ்ட்களை விளையாடியுள்ள பிரையன் லாரா 11,953ரன்களை 52.88என்ற சராசரியுடன் பெற்றுள்ளார்.34சதங்கள் 48அரை சதங்கள்;டெஸ்ட் வாழ்வில் 88சிக்சர்களை லாரா அடித்துள்ளார் 161கேட்ச்களை பிடித்துள்ளார். சச்சின் 150டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார்.ஏற்கனவே லாராவைக் காட்டிலும் 19டெஸ்ட் போட்டிகளை கூடுதலாக விளையாடிவிட்டார்.11,877ரன்களை 54.23என்ற சராசரியுடன் பெற்றுள்ளார்.39சதங்கள் 49அரை சதங்கள்.கேட்ச்கள் 98;சிக்சர்கள் 47. ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக இருவருமே 1991-92ஆம் ஆண்டு தொடரில்தான் முதல் போட்டியை விளையாடுகின்றனர். 1992முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான தனது கிரிக்கெட் சகாப்தத்தில் லாரா ஆஸ்ட்ரேலியாவுடன் 31டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். இதில் 2856ரன்களை 51.00என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார்.9சதங்கள் அடித்துள்ளார். ஆஸ்ட்ரேலிய மைதானங்களில் 19டெஸ்ட்களை ஆடியுள்ள லாரா 1469ரன்களை 41.97என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஒரு இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச சொந்த ரன்கள் 277 மேற்கிந்திய தீவுகளில் 12 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள லாரா 1387ரன்களை 66.04என்ற சராசரி விகிதத்தில் பெற்றுள்ளார். |
Thursday, October 23, 2008
ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக சச்சின்-லாரா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment