|
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 469ரன்னும்,ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 268ரன்னும் எடுத்தன.இந்திய அணி 2-வது இன்னிங்சில் 3விக்கெட் இழப்புக்கு 314ரன்னில் டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 516ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்து.2-வது இன்னிங்சை விளையாடிய அந்த அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 141ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.மைக்கேல் கிளார்க் 42ரன்னுடனும்,ஹாடின் 37ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று (செவ்வாய்க் கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.தோல்வியை தவிர்க்க மேலும் 374 ரன் தேவை கைவசம் 5விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. ஜாகீர்கானின் அபாரமான பந்துவீச்சில் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன.முதல் ஓவரின் கடைசி பந்தில் ஹாடின் (37 ரன்) போல்டு ஆனார். அவரது அடுத்த ஓவரில் 2-வது பந்தில் ஒயிட் (1 ரன்) அவுட் ஆனார். 3-வது பந்தில் பிரெட் லீ போல்டு ஆனார்.அடுத்தடுத்து 2 பந்தில் 2 விக்கெட் கைப்பற்றியதால் ஜாகீர்கானுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்தது.ஆனால் ஜான்சன் அதை முறியடித்து விட்டார்.3ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. 144 ரன் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்தது. 9-வது விக்கெட்டான கிளார்க்- ஜான்சன் ஜோடி சிறிது தாக்கு பிடித்து ஆடியது. குறிப்பாக கிளார்க் மட்டுமே இந்திய பந்து வீச்சை சமாளித்தார். அமித் மிஸ்ரா இந்த ஜோடியை பிரித்தார். ஜான்சன் 26ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 194 ஆக இருந்தது. கடைசியாக கிளார்க் 69ரன்னில் மிஸ்ரா பந்துக்கு வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 64.4ஓவரில் 195ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 320ரன்னில் அபார வெற்றி பெற்றது. ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும்,இஷாந்த் சர்மா,அமித் மிஸ்ரா தலா 2விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றி மூலம் 4டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியா 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட் "டிரா"ஆனது. 3-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் 29-ந்தேதி தொடங்குகிறது |
No comments:
Post a Comment