|
|
ஒரிசா,கர்நாடகா மத கலவரம் தொடர்பாக மேல்சபையில் கம்னிஸ்டு-பாரதீய ஜனதா இடையே மோதல் ஏற்பட்டது.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2-வது பகுதி கூட்டம் இன்று தொடங்கியது. பாராளுமன்றம் கூடியதும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.சமீபத்தில் மரணம் அடைந்த பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஸ்ரீகாந்தப்பா,லால் திவார்,மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் 7பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்துடன் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்புகளில் உயிர் இழந்தவர்கள்,இமாச்சல பிரதேசம் கோவில் நெரிசலில் உயிர் இழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் சபை திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல மேல்-சபையிலும் இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது கம்னிஸ்டு எம்.பி.க்கள் சமீபத்தில் ஒரிசா,கர்நாடகத்தில் மத கலவரத்தில் இறந்தவர்களுக்கும் ஒரு இரங்கல் தெரிவிக்கவில்லை என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பாரதீய ஜனதா எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரும் அவையின் மையப்பகுதிக்கு வந்து வாக்குவாதம் செய்தனர். இதனால் மேல் சபை தலைவர் அமீது அன்சாரி சபையை 12மணி வரை ஒத்தி வைத்தார்.12மணிக்கு மீண்டும் சபை கூடியது.அப்போது பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி,கம்னிஸ்டு எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரதமர் பாராளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீறி விட்டார்.அவர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வர வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.இதனால் சபையை திங்கட்கிழமை வரை மேல் சபை தலைவர் ஒத்தி வைத்தார். இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் பாராளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீறி விட்டதாக அவர் மீது கம்னிஸ்டு கட்சிகள் உரிமை மீறல் நோட்டீசு கொடுத்துள்ளன.சபாநாயர் சோம்நாத் சட்டர்ஜி,மேல் சபை தலைவர் அமீது அன்சாரி ஆகியோரிடம் இந்த நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment