|
|
கனடா நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.எனினும் நாடாளுமன்றத்தில் தேவையான பெரும் பான்மையைவிட குறைவான இடங்களையே அக்கட்சி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 308இடங்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 142இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கனடா நாட்டு தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. உலகளாவிய அளவில் காணப்படும் பொருளாதார நெருக்கடி பிரச்சனை யில் நடைபெற்ற தேர்தலில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை பலம் இல்லாத போதிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ஹார்ப்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. |
No comments:
Post a Comment