Thursday, October 30, 2008

ஒரிஸ்ஸா : உயிர் பிழைக்க வீடுகளில் காவிக் கொடி

ஒரிஸ்ஸா மாநில காந்தமால் மாவட்டத்தில் வன்முறைக் கும்பல்களிடமிருந்து உயிர் பிழைப்பதற்காக, தாங்கள் இந்துதான் என்று தெரியப்படுத்தும் விதமாக கிறிஸ்தவர்கள் வீடுகளிலும் காவிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஒரிஸ்ஸா மாநில காந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள கிறிஸ்தவர்கள் உயிர் பயத்தில் உள்ளனர்.

வன்முறைக் கும்பல் எந்த நேரமும் புகுந்து தாக்குதல் நடத்தலாம் என்பதால்,வன்முறைக் கும்பல்களிடமிருந்து தப்புவதற்காக, கிறிஸ்தவர்கள் கூட தாங்கள் இந்து என்று தெரிவிக்கும் நோக்கத்தில், தங்களது வீடுகளின் உச்சியில் காவிக் கொடியை பறக்க விட்டுள்ளனர்.

" ஒரு கொடி எங்களது உயிரை காப்பாற்றுகிறது என்றால் அதனை வீட்டு மீது பறக்க விடுவதில் தவறில்லை " என்று அங்குள்ள கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாவட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் கிறிஸ்தவர்களே அதிகம்.ஆனால் அங்குள்ள வீடுகளில் காவிக் கொடிகள் வரிசையாக பறப்பதை பார்க்கும்போது, அந்த கிராமமே இந்து கிராமமோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails