Saturday, October 11, 2008

அமெரிக்க அதிபர் புஷ் மீது ஒபாமா கடும் தாக்கு

 
 
lankasri.comஅமெரிக்க அதிபர் புஷ்ஷின் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டன என்று அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபராக இருக்கும் புஷ்ஷின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைகிறது. இதையெடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய அடுத்தமாதம் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக பாரக் ஒபாமாவும் ஆளும் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கைனும் போட்டியிடுகிறார்கள்.இவர்களில் ஒபாமாவுக்கே ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இருவரும் பொதுமக்கள் மத்தியில் அடிக்கடி விவாதம் நடத்தி தங்கள் வருங்கால திட்டங்களை கூறிவருகிறார்கள்.நேற்றுமுன்தினமும் இதே போன்று ஒரு விவாதம் நடைபெற்றது.அப்போது பேசிய ஒபாமா,அதிபர் புஷ்ஷின் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.தான் பதவிக்கு வந்தால் பொருளாதார நெருக்கடியை சீர்படுத்தப்போவதாகவும் அவர் கூறினார்.

அவரை எதிர்த்து போட்டியிடும் மெக்கைன் பேசுகையில் புதிய பொருளாதார கொள்கைகளை வகுத்து நெருக்கடியை தீர்த்து வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்போவதாக உறுதி அளித்தார்.இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் இறுதியில் ஒருவரை ஒருவர் நாகரீகமான முறையில் கைகுலுக்கி விடைபெற்றனர்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223624973&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails