கட்டுரையாக்கம்: இங்கிர்ட் அல்புக்யூர்க் ஆன்மீகவாதிகள் நம்பிக்கை கொள்ளவேண்டியது இயேசுவில் மட்டுமே. அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது இயேசு அவர்களுக்காக என்ன செய்தார் என்பதையே. மாறாக கிறித்தவர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்யவில்லை என்பதையல்ல. (மனிதர்களை),ஆலயங்களை, வாழ்விடங்களை, பாதைகளை தகர்ப்பதும் எரிப்பதும் (ஆன்மீகவாதிக்கு) தேவையற்ற கோபவெளிப்பாடுகள். ஒருவகையில் இவை அர்த்தமற்ற போர்களே.ஏனெனில் இந்துத்துவம், கிறித்தவம் ஆகியவை மதங்கள் அல்ல; அவை ஒரு வாழ்க்கை முறைகளே. ஹிந்து என்பது சிந்து என்ற சொல்லில் இருந்து வந்த ஒன்று. சிந்து என்பது ஒரு நதியின் பெயர். சிந்து நதியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள் (அந்நாளில்) ஹிந்துக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆக ஹிந்து என்பது ஒரு புவியியல் சார்ந்த வார்த்தையன்றி அது ஒரு மதமல்ல. ஹிந்துக்களின் மதம் "சனாதன தர்மம்" அதாவது "பழமையான வாழ்வியல் முறை'. இந்த சனாதன தர்மம் ஒருவனின் நம்பிக்கை,கடமைகள், அவனது தொழில் ஆகியவற்றின் கலவையாக இருந்தது.ஹிந்துக்கள் அவர்களது வாழ்க்கயின் நோக்கத்தை தேடுவதும் (உணர்ந்ததைக்) சாதகம் புரிய முயற்சி செய்வதுமாக இருந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்தோர் அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், ஹிந்துவாகவே இருந்தார்கள் மக்கள் உண்மயாகக் கடவுளைத் தேடுகிறார்கள்; அவர்களாகக் கடவுளைக் கண்டடைய முடியாதபோது, மக்கள் தங்களை கடவுளிடம் இட்டுச் செல்ல குருக்களைத் தேடுகிறார்கள். 'குரு' என்பதன் அர்த்தம் மக்களை இருளில் இருந்து ஒளிக்குக் கூட்டிச் செல்பவர் என்பதே. ஒருவர் கிறித்துவை அறிந்து கொள்வதைப் பற்றிப் (கிறித்துவைப் பற்றி அறிந்து கொள்வதல்ல) பேசும் பொழுது, அது கிறித்துவுடனான ஆழ்ந்த தனித்த ஒரு உறவினைப் பற்றியது; அது கிறித்துவை தன் மீட்பராக (இரட்சகராக) ஏற்றுக் கொள்வதும், அன்பையும் மன்னிப்பையும் மைய்யமாகக் கொண்ட அவருடைய கோட்பாடுகளுக்கேற்ப வாழ்வது; இந்த வாழ்முறை கண்ணெதிரில் காணும் கிறித்தவ கொள்கைகள், வழிபாட்டுமுறைகள், அதற்கான கட்டிடங்கள் ஆகியவற்றோடு மிகச் சிறிய அளவிலே ஆன தொடர்புடையது. ஒரு கிறித்தவ ஆலயத்தை இடிப்பது என்பது துயரச் சம்பவம்; ஆயினும் அது கிறித்துவை காயப்படுத்தி விடுவது ஆகாது. இன்னும், கிறித்துவை அறியாமலே ஒருவன் கிறித்தவனாய் இருக்க வாய்ப்புண்டு. அதே போல் ஒரு ஹிந்துவாய் இருந்து கொண்டு கிறித்துவை அறிந்து கொண்டிருக்க வாய்ப்புண்டு. முடிவாக, யார் கிறித்துவின் வழியில் உண்மையாய் நடப்பவர்கள்? கிறித்துவை அறிந்து கொண்டு ஆனால் கிறித்தவர்கள் என அறியப்பட விரும்பாத ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உண்டு. ஏனெனில் இந்த பதத்தினால் ஏற்றப்படும் கூடுதல் சுமை,கடந்த கால வலிகள், கிறித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களால் இந்திய மக்களிடத்தில் சுமத்தப்பட்ட வேதனையும் வெட்கமுமானவைகள் எனப் பல காரணங்கள். உண்மையில், ஒருமுறை மதமாற்றத்திற்கு மகாத்மா காந்தியிடம் அழைப்பு விடுத்தபோது அவர் சொன்னார்," என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல ஹிந்துவாக இருப்பதே, நல்ல கிறித்தவனாக இருக்கிறேன் என்பதே. கிறித்துவையும் அவர் போதனைகளையும் நம்புவதற்க்கும் (விசுவசிப்பதற்கும்)உங்கள் கோட்பாடுகளில் நான் சேர வேண்டும் என்பது எனக்கு அவசியமில்லை." அநேக கிறித்தவர்கள் நற்செய்தியை எப்படி அறிவிக்கப்பட விரும்பினாரோ, அப்படி அறிவிக்கத் தவறி விட்டனர் என்பது தெளிவாயினும், கிறித்து தன்னுடைய தெய்வீக மகிமையையும் வலிமையையும் வெளிப்படுத்த கிறித்தவர்களை மட்டுமே சார்ந்தவராயில்லை. ஆன்மீகவாதிகள் கிறித்துவில் நம்பிக்கை கொள்ளவேண்டும்; அவர் அவர்களுக்காய் என்ன செய்தார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி, கிறித்தவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்பதால் அல்ல. இன்றைய இந்தியாவில் நிலவும் குழப்பமான சூழலில், கிறித்துவை உண்மையாகப் பின்பற்றுபவர்கள், தங்களுக்கு எதிரான இந்த எதிர்ப்புணர்வை, வன்முறையின் மூலமோ இன்னும் துன்புறுத்தலுக்கு தற்கையளிப்பதன் மூலமோ எதிர்கொள்ளப் போவதில்லை. ஆனால் அன்பின் செய்தியின் மூலம்,இந்த நற்செய்தியை(சுவிஷேசத்தை) ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வாக்குவதன் மூலம், கடந்த காலத்தில் செய்யப்பட்ட இழப்புகளை இல்லாமல் செய்வார்கள். அதே நேரத்தில்,இந்த நற்செய்திக்கு பதிலளிப்பது என்பது உண்மையைத் தேடுகின்ற ஹிந்துத்துவ தேடலுக்கு எதிரானதல்ல என்பதை ஒவ்வொரு ஹிந்துவும் உணர்ந்து கொள்ள முடியும். ஏனென்றால் நிறை உண்மையை பழமையான வேத காலத்திலிருந்தே தேடுபவர்களுக்கு, இயேசுவே கடவுள் நிலையின் முழுமையாயிருக்கிறார். அஸதோமா ஸாத் காம்யா (உண்மையற்றதிலிருந்து நிறை உண்மைக்கு என்னைக் கொண்டு செல்) இயேசு சொல்கிறார்: "நானே வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறேன்" தமஸோமா ஜோதிர் காம்யா ( இருளிலிருந்து ஒளிக்கு என்னை அழைத்துச் செல்லும்) இயேசு சொல்கிறார்: " நானே உலகின் ஒளி. என்னைப் பின்செல்பவன், ஒருபோதும் இருளில் நடவான். மாறாக வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பான்" மிர்த்யோர்மா அமிர்தம் காம்யா ( இறப்பிலிருந்து இறவாமைக்கு என்னை இட்டுச் செல்லும்) இயேசு சொல்கிறார்: " நானே உயிர்ப்பும் வாழ்வுமாயிருக்கிறேன். என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பினும் வாழ்வான். என்னில் நம்பிக்கை கொண்டு, என்னுள் வாழ்பவன் ஒருபோதும் இறக்கமாட்டான்." Every Christian in India is a 'Hindu' |
No comments:
Post a Comment