பஜ்ரங் தளத்தை தடை செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் அமளி |
|
பஜ்ரங் தளம் அமைப்பைத் தடை செய்ய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியதையடுத்து மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது.மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதாவது: மகாராஷ்டிரத்தில் மாலேகான்,குஜராத்தில் மொடாசா ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்து அமைப்புகளே காரணம் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவங்களில் பஜ்ரங் தளத்துக்குத் தொடர்பு உள்ளது என மகாராஷ்டிரத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையும் கூறியுள்ளது. தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இரு வேறு நிலைப்பாடு கூடாது.எப்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.பஜ்ரங் தளம் மற்றும் ஹிந்து ஜாகரண் மஞ்ச் ஆகிய அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்றார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பாஜக உறுப்பினர்களுக்கு எதிராக மற்றவர்களும் கோஷம் எழுப்பினர்.இதனால்,அவையில் அமளி ஏற்பட்டது.இதையடுத்து அவை 10நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கெனவே கேள்வி நேரத்துக்குப் பின் இப் பிரச்னை குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன்,ரஷீத் ஆல்வி ஆகியோர் அனுமதி கேட்டனர். முன்னரே நோட்டீஸ் கொடுக்காததால் அனுமதி அளிக்க முடியாது என மாநிலங்களவை துணைத் தலைவர் கே.ரஹ்மான் கான் கூறினார். |
No comments:
Post a Comment