|
"தேர்வு குழுவினர் என்னை மோசமாக நடத்தினர்.இனிமேலும் என்னை பலிகடா ஆக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் ஓய்வை அறிவித்தேன்,"என்கிறார் கங்குலி.இந்திய அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்தவர் கங்குலி. இவர் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டின் நிர்ப்பந்தம் தான் காரணம் என கூறப்படுகிறது. நெருக்கடி கொடுத்தனர்:இந்நிலையில் வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வு குழுவினர் தன்னை பலிகடா ஆக்கி விட்டதாக கங்குலி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:தேர்வாளர்களின் கருணையில் விளையாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு தொடருக்கு வாய்ப்பு தருவார்கள். ஆனால், அடுத்த தொடரிலிருந்து நீக்கி விடுவார்கள். எப்போதும் என்னை தான் "பலிகடா"ஆக்குகிறார்கள். இது நீடிக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் ஓய்வு பெற முடிவு செய்தேன். உங்கள் தலையில் துப்பாக்கியை வைத்தால், அதை எவ்வளவு நேரம் தான் பொறுத்து கொள்வீர்கள். 450 போட்டிகள் விளையாடிய பின்பும் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். துக்கம் வரவில்லை: இரானி கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கப்படுவேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. சொல்ல முடியாத வேதனை காரணமாக ஒரு மாதம் எனக்கு துக்கம் வரவில்லை. புதிய தேர்வு குழுவினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பொறுப்பேற்றிருந்தால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். சிலர் தாங்கள் சேர்த்த ரன்களை விட அதிக முறை "ஹேர் ஸ்டைலை"மாற்றியுள்ளனர். இவர்களுக்கு அணியில் தொடர்ந்து இடம் அளிக்கப்படுகிறது. சிறப்பாக விளையாடிய போதும் என்னை நீக்கிவிட்டார்கள். எனக்குரிய மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு கங்குலி தெரிவித்தார் |
No comments:
Post a Comment