|
|
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி முழுவதையும் மனப்பாடம் செய்து சாதித்துள்ளார். அமெரிக்கா, நியூயார்க்கை சேர்ந்தவர் அம்மோன் சேயா (37). இவர், மிகவும் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் மனப்பாடம் செய்துள்ளார். 22 ஆயிரம் பக்கங்களை கொண்ட இந்த அகராதி முழுவதையும் மனப்பாடம் செய்ய, அவருக்கு ஒரு ஆண்டு காலம் ஆனது. பத்து வயதில் இருந்தே ஆக்ஸ்போர்டு அகராதியை படிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார், அம்மோன் சேயா. அகராதியில் உள்ள வார்த்தைகளை மனப்பாடம் செய்வதற்காக, கடும் சிரமத்தை சந்தித்துள்ளார். அவர் கூறுகையில், "படிக்கும்போது, கடினமான வார்த்தைகள் இருந்தால், அதை குறித்து வைத்துக் கொள்வேன். இந்த அனுபவத்தை வைத்து ஒரு புத்தகம் எழுதியுள்ளேன்"என்றார். |
No comments:
Post a Comment