|
|
2008ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த ஹரால்டு ஹூசேன் மற்றும் பிரான்சைச் சேர்ந்த சினோசி மற்றும் மான்டகேனீர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபலால் நிறுவப்பட்ட நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட 6 துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.மருத்துவ நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஜெர்மனியைச் சேர்ந்த ஹரால்டு ஹூசேன் மற்றும் பிரான்சைச் சேர்ந்த பாரி சினோசி மற்றும் லூக் மான்டகேனீர் ஆகியோர் பெறுகின்றனர். எச்ஐவி வைரசை கண்டுபிடித்ததற்காக பிரான்ஸ் விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்க்கான காரணத்தை கண்டறிந்ததற்காக ஜெர்மன் விஞ்ஞானி இந்த விருதை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223307663&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment