பீஜிங், அக்.8-
திபெத்தில், 2 முறை பூகம்பம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 30 பேர் பலியானார்கள்.
கிர்கிஸ்தானில்...
ரஷியாவில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தான் நாட்டின் சீன எல்லை அருகே பூகம்பம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 72 பேர் பலியானார்கள். இதேநேரத்தில் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்திலும் 2 முறை பூகம்பம் ஏற்பட்டது. இதன் வீரியம் ரிக்டார் அளவில் 6.6 ஆக இருந்தது.
பூகம்பத்தின் மையம், திபெத்தின் தலைநகரான லாசாவில் இருந்து 80 கி.மீ தொலைவில் இருந்தது. பூகம்பம் காரணமாக தலைநகர் லாசா, ஜிடார், டாம்சங் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.
30 பேர் பலி
பூகம்பம் காரணமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உடனடி தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அதன்பிறகு வந்த தகவல்கள் குறைந்த பட்சம் 9 பேர் பலியானதாக தெரிவித்தன. ஆனால் சிறிது நேரத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பலியான 9பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்தன'' என்று தெரிவித்தனர்.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் கெடார் நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நகரம் பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ளது.
பூகம்பம் ஏற்பட்டபோதிலும், குயிங்காய்-திபெத் ரெயில்வேயும், லாசா விமானநிலையமும் வழக்கம் போல செயல்பட்டன.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=443321&disdate=10/8/2008
No comments:
Post a Comment