புதுடெல்லி, அக்.6-
ஒரிசா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சமீபத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. இதையொட்டி கலவரங்களும் ஏற்பட்டன. இது பற்றி ஆய்வு செய்ய தேசிய சிறுபான்மையோர் ஆணைய தலைவர் ஷபி குரோஷி தலைமையில் ஒரு குழு பெங்களூர், மங்களூர், உடுப்பி ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டது. அதே போல ஒரிசாவுக்கும் 2 குழுக்கள் சென்று பார்த்து வந்தது.
இந்தக் குழு நேற்று தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் ஒரிசா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சிறுபான்மையோர் மீதான தாக்குதலுக்கு விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள்தான் காரணம். ஆகவே அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அந்த அமைப்புகளின் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட 2 மாநில அரசுகளும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=442977&disdate=10/6/2008
No comments:
Post a Comment