இங்கிலாந்து அறக்கட்டளைக்கு நல்லெண்ண தூதராக கஜோல் நியமனம் |
|
இங்கிலாந்தில் உள்ள லூம்பா அறக்கட்டளைக்கு நல்லெண்ண தூதராகவும், புரவலராகவும் பிரபல இந்தி நடிகை கஜோல் நியமிக்கப் பட்டுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள இந்த அறக்கட்டளையானது குறிப்பாக இந்தியாவில் விதவை தாய்மார்களின் பிள்ளைகள் கல்வி கற்பதில் பெரும் உதவி செய்யும் பணியை செய்துவருகிறது. நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட கஜோலுக்கு லூம்பா அறக்கட்டளை தலைவி செர்ரி பிளேர், கஜோல் நியமனத்திற்கான பத்திரத்தை வழங்கினார். இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவிதான் செர்ரி பிளேர். மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தை ஒட்டியும், இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை ஒட்டியும் நேற்று முன்தினம் மாலையில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த நியமன பத்திரத்தை கஜோலிடம், செர்ரி பிளேர் வழங்கினார். கஜோல் நடித்த தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே, குச் குச்சு ஹோத்தாகே போன்ற படங்கள் மிகவும் பிரபலமானவை. நியமன பத்திரத்தை பெற்றபின் பேசிய கஜோல், நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் நான் முடிந்த அளவு நல்லமுறையில் செயல்படுவேன் என்று கூறினார். இந்த அறக்கட்டளையை துவக்கிய ராஜ் லூம்பா பேசுகையில், இந்த அறக்கட்டளையின் முன்னேற்றத்திற்கு கஜோல் சிறந்த முறையில் செயல்படுவதோடு, நிதி வசதியையும் பெருக்கிட உதவுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்திற்கான இந்திய ஹை கமிஷனர் சிவசங்கர் முகர்ஜி, லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், முன்னாள் மேயர் கென் லிவிங்ஸ்டன், இங்கிலாந்து பாராளுமன்ற தலைவர்களில் ஒருரான லார்டு நவநித் தோலகியா உள்பட மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அறக்கட்டளையின் தற்போதைய தலைவர் செர்ரி பிளேர் பேசும்போது, இந்த அறக்கட்டளையானது தனது பணியை இந்தியாவில் மட்டுமல்லாது, இங்கிலாந்து, நேபாளம், தென் ஆப்பிரிக்கா, லுவாண்டா ஆகிய நாடுகளிலும் தனது பணியை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். |
No comments:
Post a Comment