| |
| |
ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர் என நினைத்து இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்ணை கலவரக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக்கொன்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரிஸ்ஸாவில் கடந்த மாதம் 23ம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் உள்பட 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர், கிறிஸ்தவ தேவாலயங்கள் அடித்து நொறுக்கியதோடு, கிறிஸ்தவ மக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்தமாதம் 24 ஆம் தேதி தொடங்கிய வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக, கடந்த மாதம் கந்தமால் மாவட்டத்தில் 28 வயது கன்னியாஸ்திரி ஒருவர், கலவரக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த கன்னியாஸ்திரியை காப்பாற்ற முயன்ற பாதிரியாரையும் அந்த கும்பல் அடித்து உதைத்து நிர்வாணமாக்கியது. இதுகுறித்து அந்த கன்னியாஸ்திரி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாதமாகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பத்திரிகைகளில் செய்தி வெளியான பின்னரே, இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, கடந்த மாதம் 25 ஆம் தேதி நடந்த மற்றொரு பாலியல் பலாத்கார கொடுமையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரிஸ்ஸாவின் பர்கத் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஓர் அனாதை விடுதியில் ரஜனி என்ற 20 வயது மாணவி பணிபுரிந்து வந்தார். இந்த அனாதை விடுதிக்குள் புகுந்த கலவரக் கும்பல், ரஜனியை பாலியல் பலாத்காரம் செய்தது. அவரை காப்பாற்ற முயன்ற பாதிரியாரை அடித்து உதைத்து, பக்கத்து அறையில் போட்டு பூட்டியது. பலாத்காரத்தின் போது, ரஜனியில் அலறல் அந்த கிறிஸ்த தேவாலயம் முழுவதும் எதிரொலித்துள்ளது. எனினும், அவரை காப்பாற்ற போலீசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பலாத்காரம் முடித்ததும், அந்த கும்பல் ரஜனி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, உயிரோடு எரித்துக்கொன்றது. ரஜினி ஓர் கிறிஸ்தவப் பெண் என நினைத்து அந்த கும்பல் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்து மதத்தைச் சேர்ந்த ரஜனி ஓர் கல்லூரி மாணவி. அவர் தனது படிப்பு தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்காக அந்த அனாதை விடுதியில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார். அனாதையான ரஜனியை, குழந்தை இல்லாத ஓர் தம்பதியினர் எடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் தான், பட்டப்பகலில் கிறிஸ்தவ அனாதை விடுதிக்குள் பலாத்காரம் செய்து, எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, அந்த பகுதி மக்கள் கூறுகையில், "மாநில அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதேபோன்று வெளியே வராத பல கொடுமைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்துள்ளனர். | |
(மூலம் - வெப்துனியா) |
http://in.tamil.yahoo.com/News/National/0810/04/1081004013_1.htm
No comments:
Post a Comment