சிகரெட் பழக்கத்தை நிறுத்த நடத்தப்பட்ட மதச் சடங்கில் கணவன்-மனைவி அவர்களது குடும்பத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டனர்.இந்த மதச்சடங்கில் படுகாயமடைந்த 15 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலேசிய நாட்டில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த தம்பதி முகமது இப்ராஹிம் (47), ரோஸினா (41). இவர்கள் வியாழக்கிழமை தங்கள் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றனர். அப்போது இப்ராஹிமிடம் உள்ள புகைப் பழக்கம், ரோஸினாவுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்பது குறித்து பேச்சு எழுந்தது. அங்கிருந்த அவரது உறவினர் ஒருவர் மதச் சடங்கு மூலம் புகைப் பழக்கத்தையும், நோயையும் போக்கி விட முடியும் என்று ஆலோசனை வழங்கினார். இதனையடுத்து உறவினர்கள் நான்கு பேரும் தம்பதிகளை "மதச்சடங்குப் படி"கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அவர்களது தலையை மேசையில் வைத்து இடித்தனர். இதில் தம்பதிகள் இருவரும் படுகாயமடைந்து சுயநினைவை இழந்தனர். மதச்சடங்கு முடிந்து ஒருமணி நேரமாகியும் அவர்கள் மயங்கிய நிலையில் இருந்ததால், உறவினர்கள் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ வரச் செய்தனர். எனினும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இத்தம்பதிகளுடன் சிறுமி ஒருவருக்கும் இது போன்ற மதச் சடங்கு நடத்தப்பட்டது. அந்தச் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தம்பதி, சிறுமியைத் தாக்கிய உறவினர்கள் 4 பேரை போலீஸர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
Saturday, October 4, 2008
சிகரெட்டை கைவிட மதச்சடங்கு:குடும்பத்தினரால் தம்பதி அடித்துக் கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment