இயற்பியல் துறையில் நோபல் பரிசு
3 பேருக்கு வழங்கப்படுகிறது
ஸ்டாக்கோல்ம், அக்.8-
மருத்துவம், அறிவியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து அறிவியலுக்கான நோபல் பரிசு பெறுபவர் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி டோக்கியோவில் பிறந்த அமெரிக்கரான யோய்ச்சிரோ நம்பு என்பவருக்கு, `உப-அணு அறிவியல் தொழில் நுட்பத்தை கண்டு பிடித்ததற்காக' பரிசு வழங்கப்படுகிறது. அவருடன், மகோடோ கோபயாஷி, தோஷிஹிடே மஸ்காவா ஆகிய ஜப்பான் ஆராய்ச்சியாளர்களும் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். மூன்று விதமான நில நடுக்கங்களை கண்டு பிடித்ததற்காக, இவர்கள் இருவரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பரிசுத் தொகையான சுமார் ரூ.6 கோடியில் (1.4 மில்லியன் டாலர்) பாதித் தொகை யோய்ச்சிரோ நம்புவுக்கும், மீதி தொகையானது மகோடோ மற்றும் மஸ்காவா ஆகியோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
No comments:
Post a Comment