Wednesday, December 9, 2009

சோனி வழங்கும் ஆடு புலி ஆட்டம்

 

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட முடியும் என்றாலும், பல இல்லங்களில் சிறுவர்கள் கேம்ஸ் விளையாட பிளே ஸ்டேஷன்கள் என்னும் சாதனத்தைப் பயன்படுத்துவதனைக் காணலாம். இவற்றிற்கான கேம்ஸ் தயாரிப்பில் சோனி நிறுவனம் அண்மையில் புதுமையைக் கொண்டுவந்துள்ளது. தமிழில் நம் நாட்டிற்கேற்ற கேம்ஸ்களை வடிவமைத்துத் தந்துள்ளது. இதற்கென சோனி கம்ப்யூட்டர் என்டர்டெய்ன் மென்ட் மற்றும் கேம் சாஸ்திரா சொல்யூசன்ஸ் இணைந்து பல கேம்ஸ்களைத் தமிழில் உருவாக்கித் தந்துள்ளன. பிளே ஸ்டேஷன்களில் விளையாடும் வகையில் பி.எஸ்.2 (ரூ.499) மற்றும் பி.எஸ்.பி. (ரூ.999) ஆகியவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இவை ஒரு கதை போல் அமைத்துத் தரப்பட்டுள்ளது. பிறந்தது முதல் வெளிநாடுகளில் வசித்த ஒருவன், தன் மூதாதையர் பிறந்த கிராமத்திற்கு வருகிறான். அங்கு அந்த கிராம விளையாட்டுக்களில் பங்கு பெறுகிறான். ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கிறான். இதில் 1. பசிசி எனப்படும் தாயக்கட்டம், 2. ஆடு புலி ஆட்டம், 3. காற்றாடி விடுதல், 4.கபடி,5.கிட்டி எனப்படும் கில்லி தண்டா மற்றும் 6. நடன விளையாட்டு என கேம்ஸ்கள் தரப்பட்டு, நாம் முழுமையான ஈடுபாட்டுடன் விளையாடும் வகையில் இயங்குகின்றன. கிராமங்களில் கூட இந்த விளையாட்டுகள் மறைந்து வரும் நாட்களில், சோனி நிறுவனம் முயற்சி எடுத்து இவற்றை பிளே ஸ்டேஷன்களில் விளையாடும் வகையில் கொண்டு வந்துள்ளது, நம் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.




சிறு துளிகள்
எந்த மொழியிலும் டைப் செய்திட இன்டர்நெட்டில் எந்த மொழியிலும் நீங்கள் விரும்பும் சொற்களை டைப் செய்திட கூகுள் தளம் உதவுகிறது. http://www.google.com /transliterate/indic/Tamil என்ற முகவரியில் உள்ள கூகுள் லேப்ஸ் என்ற தளம் செல்லவும். இங்கு சென்றால் கிடைக்கும் கட்டத்தில், நீங்கள் தமிழில் காண விரும்பும் சொல்லை, அதன் ஒலி உச்சரிப்பிற்கேற்ப ஆங்கிலத்தில் அமைக்கவும். எடுத்துக்காட்டாக Dinamalar  என்று டைப் செய்து ஸ்பேஸ் பாரைத் தட்டினால் "தினமலர்' என்று கிடைக்கும். இதில் தமிழுக்கு மட்டுமின்றி வேறு மொழிகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது மொழிகளிலும் இதே போல, ஒலியின் அடிப்படையில் சொற்களை அமைத்து ஸ்பேஸ் பாரைத் தட்டி, நாம் விரும்பும் மொழியில் பெறலாம்.



யு.எஸ்.பி. 3 பென் டிரைவ் வெளியானது
அமெரிக்காவில் பிளாஷ் மற்றும் டி.டி.ஆர். ஸ்டோரேஜ் சாதனங்களை அதிக அளவில் தயாரித்துவரும் சூப்பர் டேலன்ட் டெக்னாலஜி என்ற நிறுவனம், சூப்பர் யு.எஸ்.பி. 3 வகை டிரைவ் ஒன்றினை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இதன் டேட்டா ட்ரான்ஸ்பர் வேகம்,யு.எஸ்.பி. 2 வகையைக் காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக இருக்கும். இந்த டிரைவ் 32, 64 மற்றும் 128 ஜிபி கொள்ளளவுகளில் வெளியாகியுள்ளது. இவற்றை யு.எஸ்.பி. 2 வகை போர்ட்களிலும் பயன்படுத்தலாம். வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து நாடுகளிலும் இது விற்பனைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் முன் இன்னும் சில நிறுவனங்கள் யு.எஸ்.பி. 3 வகை மாடல்களைத் தயாரித்து வழங்கலாம்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails