சீன அரசு தொடங்கியது எய்ட்ஸை கட்டுப்படுத்த ஓரின சேர்க்கையாளர் விடுதி
தலி: எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, சீனாவில் அரசு சார்பில் ஓரினச் சேர்க்கையாளர் மதுபான விடுதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.சீனாவில் ஒரு லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளான 10 முன்னணி நகரங்களில் யுன்னான் மாநிலத்தில் உள்ள தலி நகரமும் ஒன்று. குறிப்பாக, புதிதாக உருவாகும் எய்ட்ஸ் நோயாளிகளில் மூன்றில் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளர்களாக உள்ளதாக சீனா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த இந்த நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தலி நகரில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதி ஒன்றை சுகாதார துறை தொடங்கி உள்ளது.
ÔÔதலி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிக்கப்படும். மேலும், எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும்ÕÕ என இந்த விடுதியின் காப்பாளர் ஜாங் ஜியான்போ தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் நோயாளிகளின் மருத்துவ செலவுக்காக ஆண்டுதோறும் ரூ.1.4 லட்சம் செலவிடுகிறோம். புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஓரினச் சேர்க்கையாளர் விடுதியின் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுவது குறைந்தால் இதுபோன்ற விடுதிகள் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்ÕÕ என சுகாதார துறையின் உதவி இயக்குநர் ஜியாங் அம்மின் தெரிவித்துள்ளார்.நகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் இது எந்த வகையில் எய்ட்ஸைக் கட்டுப்படுத்த உதவும் என அனைவரும் விவாதம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.
source:dinakaran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment