அப்படி லாவோஸ் பறி கொடுத்த ஒரு பொருள் எமரால்டினால் செய்யப்பட்ட பெரிய புத்தர் சிலை. உங்களிடமிருந்து, கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் அபகரித்ததைப் போல் லாவோசுக்கு எமரால்ட் புத்தர் சிலை.
லாவோசில், ஆயிரக்கணக்கான புத்தர் கோவில்கள் உள்ளன. ஒரு கோவிலில் 10 ஆயிரத்து 136 புத்தர் சிலைகள் இருக்கின்றன. தலைநகர் வியங்காங்-ல் 150 இந்தியர்கள் வசிக்கிறோம்; அனைவரும் கீழ் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம்கள் தான். எல்லாரும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் ஆங்கில, "தினசரி' வெளியாகிறது.
பிரான்சின் காலனியாக இருந்த லாவோஸ், 1975ல் தான் சுதந்திரம் அடைந்தது. லாவோசை ஆண்ட ராஜாக்கள் தான் நாட்டின் இன்றைய வறுமைக்குக் காரணம்... என்று, இன்றைய கம்யூனிஸ்ட் அரசு கருதுகிறது. லாவோசை சுற்றிலும் நாடுகள் தான்; நிலத்தால் சூழ்ந்த நாடு இது. கடல் இல்லாத குறையைப் போக்க கடல் அளவு நதி இருக்கிறது. மேகாங்க் நதி- உங்களது பிரம்ம புத்திரா நதியைப் போல் பெரியது.
இலங்கைத் தமிழர்கள் லவோசில் அதிகம்; அதேபோல், ஆயுதங்களும், சரளமாகக் கிடைக்கின்றன. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப் பவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான நாடாக இருக்கிறது. லாவோஸ் பற்றி மற்றொரு சுவாரசியமான விஷயம் - உலகத்திலேயே அதிகமான குண்டுகள் இந்த நாட்டில் தான் போடப்பட்டிருக்கின்றன.
வியட்நாம் போரின்போது, அமெரிக்க வீரர்கள் லாவோசில்தான் முதலில் குண்டுகளைப் போட்டுப் பார்த்தனர் - ரிகர்சல் மாதிரி. ஒரு லாவோஸ் பிரஜைக்கு 1.5 டன் குண்டு வீதம் போடப்பட்டிருக்கிறது!
இவ்வளவு ஆகியும், டூரிஸ்ட்களின் சொர்க்கப் பூமியாகவே காட்சி அளிக்கிறது லாவோஸ்.
No comments:
Post a Comment