இந்தியா
. "அக்காள், தங்கையை மணமுடித்தது முஸ்லிம் சட்டப்படி செல்லும்'
புதுடில்லி: "முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர், தனது மனைவியின் சகோதரியை திருமணம் செய்துவிட்டு, பின்னர் முஸ்லிம் சட்டத்தை காரணம் காட்டி, அந்த திருமணம் செல்லாது என கூற முடியாது. இரண்டாவது மனைவியை புறக்கணிக்கவும் முடியாது' என சுப்ரீம் கோர்ட், தீர்ப்பளித்துள்ளது.
முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் சாந்த் படேல். இவரது மனைவி முஸ்தா பீவி. சாந்த் படேல், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே, முஸ்தா பீவியின் சகோதரி பிஸ்மில்லா பேகத்தை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறிது நாட்களிலேயே, சாந்த் படேலுக்கும், பிஸ்மில்லா பேகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிஸ்மில்லா பேகத்துக் கும், அவரது மகளுக்கும் செலவுக்கு பணம் கொடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டார், படேல். பிழைப்பு நடத்த வழி இல்லாத பிஸ்மில்லா பேகம், உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்,"பிஸ்மில்லா பேகத்துக்கும், அவரது மகளுக்கும் மாதம், ஆயிரம் ரூபாயை, சாந்த் படேல், ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சாந்த் படேல், மாவட்ட கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் தொடர்ந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
சாந்த் படேல் தனது மனுவில்,"முஸ்லிம் சட்டப்படி, மனைவியின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது செல்லாது. இதனால், இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், ஜே.எம்.பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. விரிவான சட்ட ஆலோசனைக்கு பின், நீதிபதிகள்,"முதல் மனைவியுடனான திருமண உறவு தொடரும் நிலையிலும், மனைவியின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது முறையற்ற செயல் மட்டுமே. மனைவியின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது சட்டப்படி செல்லத்தக் கதே. இரண்டாவது மனைவிக்கு, உரிய ஜீவனாம்சத்தை, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125 பிரிவின்படி செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டனர்.
http://www.dinamalar.com/2008MAR19/events_ind5.asp
No comments:
Post a Comment