Thursday, January 15, 2009

Dr அஹ‌ம‌த் தீத‌த் அவ‌ர்க‌ளுக்கு/இஸ்லாமிய இணையத்திற்கு பதில்: யோனாவின் அடையாளம் என்றால் என்ன?

 



டாக்ட‌ர் அஹ‌ம‌த் தீத‌த் அவ‌ர்க‌ளுக்கு / இஸ்லாமிய இணைய தளத்திற்கு பதில்:

 
 
முன்னுரை:


இஸ்லாமிய இணைய தளம் "கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை" என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. (http://www.tmpolitics.net/iip/Articles/ChristianityIsAMyth.htm)

 
இந்த கட்டுரையை இவர்கள் டாக்டர் அஹமத் தீதத் அவர்களின் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியிருந்தார்கள், ஆனால், அவரைப் பற்றி அந்த புத்தகத்தில் ஒரு வரியும் எழுதாலும், தாங்களே ஆராய்ச்சி செய்து எழுதியதைப் போல எழுதியிருந்தார்கள் [ கிறிஸ்தவர்களுக்கு பதில் எழுதும் போது எங்கள் தொடுப்பை கொடுப்பதில்லை, குறைந்தபட்சம் உங்கள் இஸ்லாமிய அறிஞரின் பெயரையாவது, புத்தகத்தின் பெயரையாவது கொடுக்கலாம் அல்லவா]

 
அஹமத் தீதத் அவர்கள் செய்த அதே தவறை இவர்களும் செய்துள்ளார்கள், அவரின் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியது என்பதால், எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல் எழுதியுள்ளார்கள்.

 
இந்த கட்டுரையில், இவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்படுகிறது. இது முதல் பாகம் தான், இன்னும் அனேக பாகங்கள் வெளிவரும், மற்றும் அஹமத் தீதத் அவர்கள் தான் என் ஆன்மீக தேடலுக்கு வித்தாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. இவரின் புத்தகங்களை படித்து பதிலை தேடும் வேட்டையை ஆரம்பித்து, பதில் கிடைத்தவுடன், இப்படிப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக, ஈஸா குர்‍ஆன் தளம் ஆரம்பிக்கப்பட்டது.

 

 

பாகம் 1


உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன?



What Indeed Was the Sign of Jonah?

 
ஆசிரியர்: ஜான் கில்கிறைஸ்ட் (John Gilchrist)

 

 

இக்கட்டுரையின் உப‌தலைப்புக்கள்

 
யோனாவின் அடையாளம்


• கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா?

• "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்றால் என்ன?

• நினிவே மக்களுக்கு யோனா ஒரு அடையாளம் ஆவார்?

• யோனாவின் அடையாளமே அன்றி வேறு அடையாளமில்லை

• "இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளுக்குள்ளே இதை"

• யோனாவின் அடையாளத்தின் முக்கியத்துவம்

• இயேசுவின் உயிர்த்தெழுதல்

• யார் கல்லை புரட்டியது?

 

THE SIGN OF JONAH


யோனாவின் அடையாளம்

 

பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி, இஸ்ரவேல் நாட்டில் இயேசு தன் குறுகிய கால அந்த மூன்று வருட ஊழியத்தின் போது அனேக பலமுள்ள அற்புதங்கள் செய்தார். அந்த அற்புதங்கள் அடையாளங்களைக் கண்டு பல யூதர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள். இயேசுவின் அற்புதங்கள் எல்லாருக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படையாக இருந்தாலும், யூத தலைவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க மறுத்துவிட்டனர், மற்றும் அவரிடம் அடையாளம் காட்டும் படி, அல்லது வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை காட்டும் படி கேட்டனர்(மத்தேயு 16:1). ஒரு முறை அவர்களுக்கு "ஒரே ஒரு அடையாளம் தருவேன்" என்று இயேசு பதில் அளித்தார்:

 
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:39-40)
 
யோனா என்பவர் இஸ்ரவேலின் ஒரு பெரிய தீர்க்கதரிசியாவார். அசீரியாவின் நினிவே என்ற பட்டணத்தின் அழிவு நாளைப்பற்றி அந்நாட்டு மக்களுக்கு தீர்க்கதரிசனமாக சொல்லவேண்டுமென்று தேவனால் அவர் அழைக்கப்பட்டார். ஆனால், நினிவே பட்டணத்திற்குப் போகாமல் தர்ஷீஷ் என்ற பட்டணத்திற்கு அவர் போக நினைத்தபோது, அவர் செல்லும் கப்பலை மிகப்பெரிய புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு தாக்கியபோது, அந்த கப்பலில் பிரயாணம் செய்த மக்களால் அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார் ம அப்போது அவரை ஒரு பெரிய மீன் விழுங்கிவிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த மீனின் வயிற்றிலிருந்து உயிரோடு தூக்கி எறியப்பட்டு அந்த நினிவே பட்டணத்திற்குள் சென்றார்.

அந்த மீனின் வயிற்றில் யோனா இருந்த மூன்று நாட்களைப் பற்றி "யோனாவின் அடையாளம்" என்று இயேசு குறிப்பிட்டார். மற்றும் இந்த ஒரே ஒரு அடையாளம் மட்டுமே, தன் மீது நம்பிக்கை வைக்காத யூதர்களுக்கு தான் கொடுக்கும் அடையாளம் என்று இயேசு கூறினார். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகரத்தில் உள்ள "இஸ்லாமிய பிரச்சார மையம் (Islamic Propagation Centre)" என்ற இயக்கத்தைச் சார்ந்த அஹமத் தீதத்(Ahmed Deedat) என்பவர், 1976ம் வருடத்தில் "யோனாவின் அடையாளம் என்ன?(What was the Sign of Jonah?)" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த தலைப்பை பார்த்தவுடன், அந்த தலைப்பைப் பற்றி மிகவும் அதிகமாக ஆராய்ச்சி செய்து அவ‌ர் எழுதியிருக்கக்கூடும் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால், உண்மையில், தீதத் அவர்கள் தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் சொல்லாமல், இயேசு சொன்ன வார்த்தைகளைத் தாக்கி, இயேசு கூறியதை மறுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அவரது வாதங்கள் அனைத்தும் அவரது இரண்டு யூகங்களுக்குள் அடங்கிவிடும். முதலாவதாக, யோனா மீனின் வயிற்றில் அந்த மூன்று நாட்கள் உயிரோடு இருந்திருந்தால், சிலுவையிலிருந்து இயேசுவை இறக்கி அவரை கல்லரையில் வைத்த பிற்பாடு இயேசு உயிரோடு இருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு, அதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் உயிரோடு எழுந்திருந்தால், கல்லரையில் இருந்த அந்த இடைப்பட்ட காலமானது மூன்று நாட்கள் இரவும் பகலுமாக இருக்காது என்பது தான். அஹமத் தீதத் அவர்களின் இந்த இரண்டு யூகங்களை ஆராய்ந்து, இந்த தலைப்பைப் பற்றி அலசி, யோனாவின் அடையாளம் என்றால் உண்மையில் என்ன? என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

 

1. WAS JESUS ALIVE OR DEAD IN THE TOMB?

1. கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா?

 
 
பைபிளில் உள்ள யோனா புத்தகத்தின் கிறிஸ்த‌வ‌ விள‌க்க‌வுரைக‌ளின் ப‌டி, யோனா மீனின் வ‌யிற்றிலிருந்த‌ அந்த மூன்று நாட்கள் அற்புத‌வித‌மாக‌ உயிரோடு பாதுகாக்க‌ப்ப‌ட்டு இருந்தார் என்ப‌தை நாம் அறிகிறோம். அவ‌ர் மீனின் வ‌யிற்றில் இருக்கும் போது ஒரு நாழிகையும் ம‌ரிக்காம‌ல் இருந்தார், மற்றும் அந்த மீன் அவரை உயிரோடு கரையில் போட்டது.

 
அஹமத் தீதத் தன் புத்தகத்தில், மேலே சொன்ன விவரங்களை எடுத்து, புதிய ஒரு வியாக்கீனத்தைத் தருகிறார், அதாவது "யோனா எப்படியோ... அதே போல மனுஷகுமாரனும் (As Jonah was ... so shall the Son of man be)" என்று கூறுகிறார்.
 
If Jonah was alive for three days and three nights, then Jesus also ought to have been alive in the tomb as he himself had foretold!

யோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் உயிரோடு இருந்திருந்தால், இயேசு சொன்னது போல, தான் அப்படியே கல்லரையில் இருந்த நாட்களில் உயிரோடு இருந்திருக்கவேண்டும், (Deedat, What was the Sign of Jonah?, p.6).
 
 
இயேசு தனக்கும் யோனாவிற்கும் இருக்கும் ஒற்றுமை என்பது அவர் மூன்று நாட்கள் எப்படி அந்த மீனின் வயிற்றில் இருந்தாரோ, அது போல, தானும் கல்லரையில் இருப்பார் என்பதைப் பற்றியதே அல்லாமல் வேறுவகையில் இல்லை. ஆனால், இந்த முக்கியமான விவரத்தை தீதத் அவர்கள் எடுத்துவிட்டு, மற்ற விதங்களில் கூட யோனாவும் இயேசுவும் ஒன்று தான் என்றுச் சொல்கிறார், எப்படியென்றால், அந்த மூன்று நாட்கள் எப்படி யோனா உயிரோடு இருந்தாரோ அதே போல, இயேசுவும் என்று தன் சொந்த கற்பனையைச் சொல்லியுள்ளார். இயேசு சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக நாம் படிப்போமானால், தனக்கும் யோனாவிற்கும் சொல்லப்பட்ட ஒற்றுமையானது, அந்த மூன்று நாட்களைப் பற்றி குறிக்குமே அன்றி, வேறு வகையில் குறிக்காது என்பதை புரிந்துக்கொள்ளலாம். எப்படி யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தாரோ அது போல, இயேசுவும் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பார் என்பது தான் சரியான அர்த்தமாகும். ஆனால், இதனை தீதத் அவர்கள் சொல்வது போல, வியாக்கீனம் செய்யமுடியாது, அதாவது யோனா எப்படி உயிரோடு இருந்தாரோ அதே போல இயேசுவும் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று வியாக்கீனம் செய்யமுடியாது(One cannot stretch this further, as Deedat does, to say that as Jonah was ALIVE in the fish, so Jesus would be alive in the tomb). அஹமத் தீதத் அவர்கள் சொல்வது போல, இயேசு சொல்லவில்லை, மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு அப்படி பொருளும் இல்லை. இன்னும் இதைப் பற்றி மிகவும் தெளிவாக இயேசு வேறு ஒரு இடத்திலும் கூறியுள்ளார். அதாவது, தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்.
 
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

"As Moses lifted up the serpent in the wilderness, so must the Son of man be lifted up". (யோவான் 3:14-15)
 
 
மேலேயுள்ள வசனத்தில் குறிப்பிட்ட ஒற்றுமையானது "உயர்த்தப்பட்டது - LIFTED UP" என்பதை பற்றி என்பது தெளிவாக விளங்கும். மோசே எப்படி சர்ப்பத்தை உயர்த்தினாரோ அதுபோல, இயேசுவும் உயர்த்தப்படவேண்டும். சர்ப்பம் மோசேயினால் உயர்த்தப்பட்டது, யூதர்கள் ஆரோக்கியம் அடைவதற்காக, இயேசு உயர்த்தப்படவேண்டியது உலக நாடுகளின் ஆரோக்கியம், மற்றும் இரட்சிப்பிற்காக. இந்த நிகழ்ச்சியில், மோசே உருவாக்கிய வெண்கல சர்ப்பமானது உயிரோடு இருந்ததில்லை, மற்றும் தீதத் அவர்களின் லாஜிக்கை (Logic- வாதத்தை) இயேசு சொன்ன எடுத்துகாட்டோடு சம்மந்தப்படுத்தினால், அந்த வெண்கல சர்ப்பம் போல, இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்து இருக்கவேண்டும், சிலுவையிலும் அவரது மரித்த உடல் மட்டுமே இருந்திருக்க வேண்டும், மற்றும் சிலுவையிலிருந்து இறக்கும் போதும் அவர் மரித்தவராகவே இருந்திருக்க வேண்டும். அஹமத் தீதத் அவர்களின் இந்த வாதம் வாதத்திற்கு பொருத்தமானது அல்ல. அதோடு மட்டுமல்லாமல், யோனா உயிரோடு இருந்த நிலையும், இந்த சர்ப்பத்தின் உயிரில்லாத நிலையும் முரண்பட்டதாக உள்ளது (அதாவது, யோனா மீனின் வயிற்றில் இருந்த காலகட்டத்தில் முழுவதும் உயிரோடு இருந்தார், அந்த சர்ப்பம் ஆரம்பத்திலிருந்தே உயிரில்லாத பொருளாக இருந்து உயர்த்தப்பட்ட கால கட்டத்திலும் உயிரில்லாமல் இருந்தது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இருக்கின்றன).

இவைகள் நமக்கு எதை காட்டுகின்றன? இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் மோசே உருவாக்கிய சர்ப்பத்திற்கும் உள்ள ஒப்பிடுதலில், "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்ற விவரம் யோனாவோடும், "தூணில் உயர்த்தப்படுதல்" என்பதை அந்த வெண்கல சர்ப்பத்தோடும் ஒப்பிட்டார் என்பதை நாம் அறியலாம். இயேசுவின் ஒப்பிடுதலில் யோனா உயிரோடு இருந்தாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இயேசுவின் ஒப்பிடுதலுக்கும் யோனா உயிரோடு இருந்தார் என்பதற்கும் சம்மந்தமே இல்லை (It does not matter whether Jonah was alive or not - this has nothing to do with the comparison Jesus was making).

யோனாவைக் குறித்து சொல்லப்பட்ட இடத்தில் மிகவும் முக்கியமாக உள்ள நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தை நீக்கிவிட்டு, தீதத் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைப் பற்றி "யோனா எப்படியோ... அது போல மனுஷ குமாரனும்" என்று கூறுகிறார். அதாவது யோனா மீனின் வயிற்றில் எந்த நிலையில் (உயிரோடு) இருந்தார் என்பதை இயேசுவோடு ஒப்பிட்டது, தீதத் அவர்களின் சொந்தமான ஒப்பிடுதல் ஆகும். ஆனால், தீதத் அவர்கள் வழிமுறையைப் பின்பற்றி நாம் மேற்கோள் காட்டிய மற்ற வசனங்களை ஆராய்ந்தால், தீதத் அவர்கள் சொன்னதற்கு முரண்பட்ட விவாரம் தான் கிடைக்கிறது. சர்ப்பம் பற்றிய வசனத்தை கவனித்தால், நாம் இவ்விதமாக சொல்லவேண்டி வரும் "சர்ப்பம் எப்படியோ ... அதே போல மனுஷகுமாரனும் (As the serpent ... so shall the Son of man be)". இந்த விவரங்களில் சர்ப்பமானது மரித்த ஒன்றாக அல்லது உயிரில்லாத ஒன்றாக உயர்த்தப்பட்ட காலகட்டம் அனைத்திலும் இருந்தது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் சர்ப்பத்திற்கும் ஒப்பிட்டது, யோனாவோ, சர்ப்பமோ உயிரோடு இருந்ததா மரித்து இருந்ததா என்பதை ஒப்பிட்டு கூறவில்லை.

ஆக, தீதத் அவர்களின் முதலாவது மறுப்பு தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது என்பதை நாம் காணலாம். தீதத் அவர்கள் செய்யும் வாதங்களின் தன்மையில் எப்போதும் முரண்பட்ட விவரங்களே கிடைக்கும். ஒரு மறுப்பு அல்லது வாதம் தன்னைத் தானே முரண்பட்டால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது (So we see that Deedat's first objection falls entirely to the ground. A contradictory conclusion automatically results from his line of reasoning and no objection or argument which negates itself can ever be considered with any degree of seriousness).

 

 

2. THREE DAYS AND THREE NIGHTS

2. மூன்று நாட்கள் இரவும் பகலும் என்றால் என்ன?

 
 
இயேசு வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டார் என்றும் அதை தொடர்ந்து வந்த ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தார் என்றும் ஒரு சிலரை தவிர உலகமுழுவதும் உள்ள கிறிஸ்தவ சமுதாயம் அங்கீகரிக்கிறது. இயேசு கல்லரையில் ஒரு நாள் மட்டும் தான் முழுவதுமாக‌ இருந்தார், அதாவது அந்த சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் இருந்தார் என்று தீதத் அவர்கள் வாதம் புரிகின்றார் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை இரவு என்று இரண்டு இரவுகள் மட்டும் தான் அவர் கல்லரையில் இருந்தார் என்றுச் சொல்கிறார். இப்படி சொல்வதின் மூலம், யோனாவின் அடையாளம் பற்றி இயேசு சொன்ன கால விவரத்தை மறுக்க முயன்றுள்ளார் தீதத் அவர்கள். தீதத் கூறுகிறார்:
 
Secondly, we also discover that he failed to fulfil the time factor as well. The greatest mathematician in Christendom will fail to obtain the desired result - three days and three nights.

"இரண்டாவதாக, இயேசு நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தையும் நிறைவேற்ற தவறிவிட்டார். கிறிஸ்தவ உலகின் சிறந்த கணித மேதாவி மூன்று நாட்கள் இரவும் பகலும் என்பதை கணக்கிட தவறிவிட்டார்." (Deedat, What was the Sign of Jonah?, p.10).
 
துரதிஷ்டவசமாக, தீதத் அவர்கள், முதல் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்த எபிரேய பேச்சு வழக்கத்திற்கும், இந்த இருபதாம் நூற்றாண்டு ஆங்கில பேச்சுவழக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை காண தவறிவிட்டார். தீதத் அவர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், இந்த தவறை அடிக்கடி செய்கிறார் என்பதை நாம் கண்கூடாக காணமுடியும். அதாவது, அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் ஒரு நாளில் எந்த பகுதியையும் கணக்கிடும் போது, அதை ஒரு முழு நாளாகவே கணக்கிட்டனர், இந்த உண்மையை தீதத் அவர்கள் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள். இயேசு கல்லரையில் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு பிற்பாடு வைக்கப்பட்டார், மற்றும் சனிக்கிழமை முழுவதும் கல்லரையில் இருந்தார், மறு நாள் அதாவது ஞாயிறு அன்று காலை உயிரோடு எழுந்தார். அதிகார பூர்வமான யூதர்களின் காலண்டரின் (நாட்காட்டி) படி, ஞாயிற்றுக்கிழமை என்பது சனிக்கிழமை மாலை பொழுது சாய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் படி, இயேசு மூன்று நாட்கள் கல்லரையில் இருந்தார்.

யூதர்கள் எப்படி இரவு பகல் மற்றும் நாட்களை கணக்கிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளாமல், யூதர்கள் பேச்சு மற்றும் எழுதும் வழக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளாமல் அஹமத் தீதத் அவர்கள் மிகப்பெரிய தவறை(serious mistake) செய்துள்ளார்கள். அதே போல, இயேசு, தான் மூன்று நாட்கள் இரவும் பகலும் கல்லரையில் இருப்பேன் என்றுச் சொன்ன தீர்க்கதரிசனைத்தைப் பற்றி தீதத் அவர்கள் புரிந்துக்கொள்ளாமல் மறுபடியும் அதே தவறை செய்துள்ளார்கள். நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில், யூதர்கள் சொல்வது போல, "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்று ஆங்கிலத்தில் அதே வழக்கத்தின் படி, அதே பொருள் படும் படி சொல்வதில்லை நாம் அந்த வார்த்தைகளின் பொருளை, அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட முதல் நூற்றாண்டில் இருந்த எபிரேய மொழி எழுத்து மற்றும் பேச்சு வழக்கப்படி பொருள் கூறாமல், அன்று இருந்த வழக்கப்படி சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு இன்று நாம் பேசும் மொழியின் இலக்கணத்தின் படி, வேறு ஒரு மொழியின் அமைப்புப் படி பொருள் கூற முயலுவது தவறாகவே முடியும் (The expression three days and three nights is the sort of expression that we never, speaking English in the twentieth century, use today. We must obviously therefore seek its meaning according to its use as a Hebrew colloquialism in the first century and are very likely to err if we judge or interpret it according to the language structure or figures of speech in a very different language in a much later age).

நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் பேசும் போது, "இத்தனை நாட்கள் இரவும் பகலும்" என்ற வழக்கப்படி நாம் பேசுவதில்லை. உதாரணத்திற்கு, ஒரு நபர் இரண்டு வாரங்களுக்கு ஒரு ஊருக்கு செல்வதாக இருந்தால், நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் போது "ஃபோர்ட்நைட்(Fortnight) அல்லது இருவாரங்கள் அல்லது 14 நாட்கள்" என்றுச் சொல்வார். நான் இதுவரையில் ஆங்கிலத்தில் இவ்விதமாக சொல்பவரை, அதாவது "நான் பதினான்கு நாட்கள் இரவும் பதினான்கு நாட்கள் பகலும் ஊருக்குச் செல்கிறேன்" என்று சொல்பவரை நான் கண்டதே இல்லை(I have never yet met anyone speaking the English language say he will be away fourteen days and fourteen nights). அக்காலத்தில் இப்படி இரவு பகல் என்றுச் சொல்வது எபிரேய மொழியில் இருந்த ஒரு பேச்சு வழக்கமாகும் (Figure of Speech in the Hebrew). இப்படிப்பட்ட பேச்சு வழக்க வார்த்தைகளைப் பற்றி ஆராயும் போது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட உவமானத்திற்கு(figures of speech), அதை சொன்னவர் என்ன‌ பொருளில் கூறினார் என்பதை தெரிந்துக் கொள்ளாமல், இன்று நாம் அதற்கு சரியான பொருளை கூறமுடியாது. இயேசு சொன்ன அந்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு அந்த காலகட்டத்தில், அந்த காலச்சூழலில்(Context) என்ன பொருள் இருந்தது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மேலும், எபிரேய மொழியில் சொல்லப்பட்ட அந்த பேச்சு/எழுத்து வழக்கில் உள்ள ஒரு ஒற்றுமையை நாம் கவனித்தோமானால், இரவும் பகலும் என்றுச் சொல்லும் போது, இரண்டின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கும். அதாவது எத்தனை இரவுகளோ அத்தனை பகல்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்(Furthermore we must also note that the figure of speech, as used in Hebrew, always had the same number of days and nights).
 
மோசே நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்(யாத் 24:18)

Moses fasted forty days and forty nights (Exodus 24.18).

யோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் மீனின் வயிற்றில் இருந்தார்(யோனா 1:17)

Jonah was in the whale three days and three nights (Jonah 1.17)

யோபுவின் நண்பர்கள் அவரோடு ஏழு நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து இருந்தார்கள் (யோபு 2:13)

Job's friends sat with him seven days and seven nights (Job 2.13).


எந்த ஒரு யூதனானாலும் சரி,

"ஏழு பகல் மற்றும் ஆறு இரவுகள் - seven days and six nights" என்றோ அல்லது

"மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் - three days and two nights " என்றோ கூறமாட்டார்,

 
உண்மையிலேயே அவர் இந்த குறிப்பிட்ட காலத்தை குறிப்பிட நினைத்தாலும் கூட‌ இப்படி கூறமாட்டார். எபிரேய மொழியின் பேச்சு/எழுத்து வழக்கத்தின் படி(colloquialism) எப்போதும் இரவும் பகலும் ஒரே எண்ணிக்கையை உடையதாக இருக்கும். ஒரு யூதன் மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் பற்றிக் கூறுவதாக இருந்தாலும், "மூன்று பகல் இரவுகள்" என்று தான் கூறுவார்.

இந்த விவரம் பற்றி மிகவும் தெளிவான உதாரணத்தை அல்லது விளக்கத்தை எஸ்தர் புத்தகத்தில் காணலாம். அதாவது "யாரும் மூன்று நாட்கள் இரவும் பகலும்" ஒன்றுமே புசிக்கவேண்டாம், உபவாசம் இருங்கள் என்று எஸ்தர் இராணி சொல்கிறார் (எஸ்தர் 4:16). ஆனால், மூன்றாம் நாளிலேயே, அதாவது இரண்டு இரவுகள் மட்டும் கழித்து, இராணி உபவாசத்தையும் முடித்துக்கொண்டு இராஜாவின் இருப்பிடத்திற்குச் செல்கிறாள்.

ஆக, யூதர்களின் வழக்கப்படி "மூன்று நாட்கள் இரவு பகல்" என்பது கண்டிப்பாக மூன்று முழு பகல்கள் மற்றும் முன்று முழு இரவுகள் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, இதற்கு பதிலாக முதல் நாளின் ஒரு பகுதியை ஒரு முழு நாளாகவும், மற்றும் மூன்றாம் நாளின் ஒரு பகுதியை ஒரு நாளாகவும் கணக்கிடுவார்கள்(So we see quite plainly that "three days and three nights", in Jewish terminology, did not necessarily imply a full period of three actual days and three actual nights but was simply a colloquialism used to cover any part of the first and third days).

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், எப்போதும் சரி, இரவுகள் மற்றும் பகல்கள் பற்றிய எண்ணிக்கையைப் கூறும் போது இரண்டிற்கும் ஒரே எண்ணை குறிப்பிடுவார்கள், உண்மையில் பகல்களை விட இரவுகள் ஒன்று குறைவாக இருந்தாலும் சரி. இப்படிப்பட்ட பேச்சு வழக்கத்தின் படி இன்று நாம் பேசுவதில்லை. மட்டுமல்ல, நம்முடைய தற்கால பேச்சு வழக்கத்தின் பொருள் தான் அக்காலத்தின் பேச்சுக்களுக்கு வரும் என்றுச் சொல்லி திணித்து கட்டாயப்படுத்த முடியாது.

இந்த விவரம் பற்றிய மிகவும் தெளிவான ஆதாரம் ஒன்று பைபிளில் உள்ளது. இயேசு யூதர்களுக்குச் சொல்லியிருந்தார், அதாவது மூன்று நாட்கள் இரவும் பகலும் நான் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பேன் என்று. ஆகையால், இயேசு சொன்ன இந்த விவரம் ஒரு வேளை தீர்க்கதரிசனமாக இரண்டு இரவுகள் முடிந்தவுடன் நிறைவேறி விடும் என்று எண்ணி, யூதர்கள் செயல்பட ஆரம்பித்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட மறுநாளில் அதாவது ஒரே இரவு மட்டுமே ஆன பிறகு (சனிக்கிழமை), யூதர்கள் பிலாத்துவிடம் சென்று கீழ்கண்டவிதம் கூறினார்கள்:
 
Sir, we remember how that impostor said, while he was still alive, 'After three days I will rise again'. Therefore order the sepulchre to be made secure until the third day.

ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும என்றார்கள் (மத்தேயு 27:63-64).
 
"மூன்று நாளைக்குப் பின்" என்ற‌ சொற்றொடரானது "நான்காவ‌து நாளைக்" குறிக்கின்ற‌து என்று நாம் புரிந்துக் கொள்கிறோம். ஆனால், யூதர்களின் பேச்சு வழக்கின் படி(colloquialism), இது மூன்றாம் நாளைக் குறிக்கும் என்று யூதர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் யூத‌ர்க‌ள் மூன்று முழூ ப‌கல்கள் ம‌ற்றும் மூன்று முழூ இர‌வுக‌ள் க‌ல்லரையை பாதுகாக்க ஜாக்கிரதைப்படவில்லை, அதற்கு பதிலாக இரண்டாம் இரவு ஆனவுடன் மூன்றாம் நாள் வரை மட்டுமே காவல் காக்க பிரயாசப்பட்டனர். ஆக, யூதர்களின் பேச்சுவழக்கத்தின் படி "மூன்று நாட்கள் இரவு பகல்" என்றுச் சொன்னால், மற்றும் "மூன்று நாளுக்குப்பின்" என்றுச் சொன்னால், நாம் நம் வழக்கத்தின் படி கருதுவது போல் அது மூன்று முழூ நாட்களின் மொத்த நேரத்தைக் குறிக்காமல், அதாவது 72 மணி நேரத்திற்கு பிறகு என்றுக் குறிக்காமல், அந்த மூன்றாவது நாளில் எந்த ஒரு பகுதியையும் குறிக்கும்(Clearly, therefore, the expressions "three days and three nights" and "after three days" did not mean a full period of seventy-two hours as we would understand them, but any period of time covering a period of up to three days.)

இந்நாட்களில் நம்மிடம் ஒருவர் வெள்ளிக்கிழமை மதிய சமயத்தில் வந்து "நான் உங்களை மூன்று நாட்களுக்கு பிறகு வந்து சந்திக்கிறேன்" என்றுச் சொல்வாரானால், அவர் நம்மை அடுத்து வரும் செவ்வாய்க் கிழமைக்கு முன்பு வந்து சந்திப்பார் என்று நாம் எதிர்பார்க்கமாட்டோம். அவர் செவ்வாய்க் கிழமைக்கு பிறகு தான் நம்மை சந்திக்கவருவார் என்று நான் எதிர்ப்பார்ப்போம். ஆனால், யூதர்கள் இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறி விடக்கூடாது என்பதற்காக மிகவும் கவலைப்பட்டு, கல்லரையை மூன்றாம் நாள் வரை மட்டும் பாதுகாத்தால் மட்டும் போதும் என்பதால், அரசரிடம் சென்று ஞாயிறு வரைக்கும் காவல் வைக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும், அதாவது "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்றாலோ அல்லது "மூன்று நாளுக்கு பின்பு" என்றுச் சொன்னாலோ, தங்கள் வழக்கத்தின் படி அந்நாட்களில் அது மூன்றாம் நாளை குறிக்குமே அல்லாமல், மூன்று முழு நாட்களுக்கு பின்பு நான்காம் நாளை குறிக்காது.

ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், நம்முடைய பேச்சு வழக்கில் இல்லாத ஒரு சொற்றொடரை படிக்கும் போது எப்படி அதன் பொருளை சரியாக புரிந்துக் கொள்வது? இதற்கு பதில் "யூதர்கள் எப்படி அக்காலத்தில் அவர்களின் பேச்சுவழக்கத்தின் படி படித்தார்கள்" என்பதை புரிந்துக்கொண்டால் தான் நமக்கு அச்சொற்றொடரின் அர்த்தம் சரியாகப் புரியும். இயேசுவின் சீடர்கள் மிகவும் தைரியமாக, "இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்" என்றுச் சொன்னபோது, அதாவது ஞாயிறு அன்று வரை இரண்டு இரவுகள் மட்டுமே கடந்திருந்தாலும், சீடர்கள் இப்படி தைரியமாகச் சொன்னபோது(அப் 10:40), எந்த ஒரு யூதனும் சீடர்களிடம் வந்து தீதத் அவர்கள் இப்போது சொல்வது போல, மூன்று இரவுகள் கடக்காமல் இரண்டு இரவுகள் தானே ஆனது அப்படியானால் எப்படி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது என்று கேள்வி கேட்கவில்லை. இந்த பிரச்சனை அக்கால யூதர்களுக்கு இருந்ததில்லை, ஏனென்றால், அவர்களின் பேச்சு வழக்கம் அவர்களுக்கு மிகவும் நன்றாகவே புரிந்து இருந்தது. ஆனால், தீதத் அவர்களுக்கு யூதர்களின் பேச்சு வழக்கம் தெரியாத காரணத்தால் தான், இயேசுவின் தீர்க்கதரிசனத்தை தாக்கி எழுதுகிறார், அதாவது, இயேசு மூன்று முழு பகல்கள், மூன்று முழு இரவுகள், கல்லரையில் இல்லை, அவர் 72 மணி நேரம் கல்லரையில் இல்லை, ஆகையால் தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லை என்று அறியாமையினால் இப்படிச் சொல்கிறார். (ஆக, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இரவும் பகலும் இருந்ததும், 72 மணி நேரம் கொண்ட மூன்று முழு இரவும் பகலும் அல்ல, மூன்றாவது நாளிலேயே அவர் மீனின் வயிற்றிலிருந்து வெளிப்பட்டிருப்பார்).

இதுவரை நாம் கண்ட விவரங்களைக் கொண்டு, இயேசு யூதர்களுக்கு காட்டுவேன் என்றுச் சொன்ன அடையாளத்திற்கு எதிராக அஹமத் தீதத் அவர்களின் பலவீன வாதத்தில் உள்ள குறைபாடை நாம் வெளிக் கொணர்ந்துள்ளோம். அடுத்ததாக, யோனாவின் அடையாளம் என்றால் என்ன என்பதை இன்னும் தெளிவாக நாம் ஆராய்வோம்.


 

 

 

Tuesday, January 13, 2009

அஷேக் மற்றும் உமர் விவாதம் - பத்ரு போர் ஒர் சிறு குறிப்பு - Tamil christians

 
 
அஷேக் மற்றும் உமர் விவாதம் - பத்ரு போர் ஒர் சிறு குறிப்பு


சகோதரர் அஷேக் அவர்கள்: பொதுவாக இஸ்லாமியர்கள் நம் தளத்தில்(www.tamilchristians.com) வந்து "பதிவுகளை" இட்டு, கட்டுரைகளை எழுதுவார்கள், நமக்கு பதில் எழுத முயற்சிப்பார்கள், ஆனால், நம் சகோதரர் அஷேக் அவர்கள் நம் தளத்திலுள்ள சகோதரர்களுக்கு மெயில் மூலம் (தனி மடல்) மூலம் பதிவுகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். எனக்கும் இதுவரை இரண்டு தனி மடல்களை அனுப்பினார், என் முதல் பதிலை தள நிர்வாகம் பதித்தது. என் இரண்டாவது பதிலை நான் அவருக்கு அனுப்பினேன், ஆனால், இன்னும் இங்கு பதிக்கவில்லை. அவர் மூன்றாவது தனி மடலையும் எனக்கு அனுப்பியுள்ளார். சீக்கிரத்தில் அதற்கும் பதிலை பார்க்கலாம். அதற்கு முன்பாக, சகோதரர் கேல்வின் அவர்களுக்கு சகோதரர் அஷேக் அவர்களின் பதிலுக்கு என் மறுப்பை இங்கு காணலாம்.


தள சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்: யார் உங்களுக்கு தனி மடல் அனுப்பினாலோ, கேள்வி கேட்டாலோ, அல்லது நம் கட்டுரைகளுக்கு உங்களுக்கு தனியாக பதில் அனுப்பினாலோ, இந்த தளத்தில் அதனை பதிக்கவும். இதனால், தவறான விவரங்கள் உங்கள் மீது திணிப்பதை நாம் அறிய வாய்ப்பு உண்டாகும், அதே போல, நான் என் கட்டுரைகளில் ஒரு விவரத்தை தவறாக சொல்லியிருந்தால், அதற்கு தகுந்த பதிலை இஸ்லாமிய சகோதரர்கள் கொடுத்து இருந்தால், அதனை நீங்கள் இங்கு கட்டுரையாக (மார்ஸ் மேடை) பதித்தால், எல்லாரும் உண்மையை அறியவும், நான் என்னை திருத்திக்கொள்ளவும், அதே நேரத்தில் எல்லாருக்கும் ஒரு பொதுவான விவரங்கள் தெரியவும் வாய்ப்பு உண்டாகும். எனவே, எந்த இஸ்லாமிய மடலாக இருந்தாலும் இங்கு பதியுங்கள், இதர சகோதரர்களுக்கும் உண்மை தெரியவர இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.


சகோதர அஷேக் அவர்களின் ஆதங்கமும், விளக்கமும்:


இஸ்லாமை விமர்சிக்கிறவர்கள் ஒரு சில வசனங்களை மட்டும் குறிப்பிட்டு பொருள் கூறுகிறார்கள், அதனால் அவர்களால் உண்மை நிகழ்ச்சியை புரிந்துக்கொள்ளமாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட வசனத்தின் முந்தைய பிந்தைய வசனங்களையும் படித்தால் தான் உண்மை புரியும் என்றுச் சொன்னார்கள். பின்னணியை புரிந்துக்கொண்டால் தான் குர்‍ஆன் வசனங்களின் உண்மை பொருள் விளங்கும் என்றார்கள்.


குர்‍ஆன் 8ம் அதிகாரத்தின் 12ம் வசனத்தின் உண்மை பொருள் புரியவேண்டுமானால், குர்‍ஆன் 8:7 லிருந்து 13ம் வசனம் வரை படிக்கவேண்டும், மற்றும் இங்கு வரும் வசனங்கள் பொதுவான வசனங்கள் அல்ல, அவைகள் தீவிரவாதத்தை ஊட்டுவதில்லை, போர் களத்தில் சொல்லப்பட்ட அறிவுரை என்றுச் சகோதரர் அஷேக் அவர்கள் சொல்லியுள்ளார்கள். ஒரு வசனத்தின் உண்மைப் பொருளை, பின்னணியை விளக்குகிறேன் என்றுச் சொல்லி, தேவையான விவரத்தை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார் அருமை சகோதரர்.


இந்த கட்டுரையில் குர்‍ஆன் 8ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட விவரங்களைப் பற்றி நான் இக்கட்டுரையில் விளக்குகிறேன், பிறகு சில கேள்விகளையும் பார்க்கலாம். அதை படித்து, நான் சொன்ன பின்னணியில் எல்லா விவரங்களும் உள்ளதா என்று நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.


முதலில் அவர் எழுதியதை படிக்கவும்:


Quote:
இந்த மூன்று வசனங்களையும் மேலோட்டமாக பார்த்தால்,இந்த வசனங்களின் மூலம் இறைவன் முஸ்லிம் அல்லாதோரை கொல்லச்சொல்வதை போல் உங்களுக்கு தோன்றலாம், பலபேர் எதனால் இப்படி தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்றா,அவர்கள் இந்த வசனங்களின் தொடர்ச்சியை பார்க்காமல் இந்த(8:12) ஒரு வசனங்களை மட்டும் பார்ப்பதினால் தான். இந்த வசனங்களின் முன்னால் மற்றும் பின்னால் வரும் வசனங்களையும் சேர்த்து ஆராய்ந்தால், இந்த வசனங்களை இறைவன் எந்த சூழ்நிலையில், யாருக்கு கூறிய நற்செய்தி என்பதை நீங்கள் எளிதாக புரிந்த்து கொள்ள முடியும். இருந்தாலும் அதை பற்றி விளக்கம் அளிக்க நான் கடமை பட்டிருக்கிறேன்.விளக்கம் அளிப்பதற்க்கு முன்பு இந்த் (8:12, 9:29, 2:191) வசனங்களின் தொடர்ச்சியில் வரும் வசனங்ளை கூறி விளக்கம் அளிக்க ஆசை படுகிறேன்.


முதலில் 8:12 வசனங்களுக்கான் விளக்கத்தை பார்ப்போம். இதன் விளக்கத்தை அறிய நீங்கள் வெளியில் போய் ஆராய தேவையில்லை, அல்

குர்ஆன் 8:7 வசனம் முதல் 8:13 வரை பார்த்தாலே போதும்.அந்த வசனங்களை பார்ப்போம்.


அல் குர்ஆன் 8:7 ல், "எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்தததை எண்ணிப்பாருங்கள். ஆயுதம் இல்லாத(வியாபார) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரருக்கவும் விரும்புகின்றான்".


….


மேலே கூறியுள்ள 7 முதல் 13 வரை வசனங்களை சேர்த்து படித்து ஆராய்ந்தீர்களானால், இந்த நிகழ்ச்சி ஒரு போரை குறிப்பிட்டு கூறப்பட்ட செய்தியேயின்றி, பொதுவாக உள்ள அனைத்து மக்களுக்கும் கூறப்பட்ட நற்செய்தியில்லை.உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்,


நபிகள் நாயகம்(ஸல்) (முஹமது நபி) இறைதூதராக இறைவனால் நியமிக்கப்பட்ட பிறகு,அரபு தேசத்தின் ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்,


அந்த சமயங்களில் அவர் தன் எதிரிகளுடன் பல போர்களை செய்துள்ளார்கள். என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.அப்படி நடந்த ஒரு போரை பற்றிய நற்செய்திதான் வசனம் 8:7 முதல் 13 வரை இறைவன் கூறியிருக்கிறான்.


அதாவது, முஹ்ம்மது(ஸல்) அவர்களின் எதிரிகள் இரண்டு பெரும் படைகளாக, முஹம்மது(ஸல்) அவர்களை எதிர்த்து போரிடுவதற்காக வருகிறார்கள். எதிகளோ இரண்டு பெரும் படைகளாக இருக்கிறார்கள் ஆனால் முஹ்மது(ஸல்) அவர்களின் படையிலோ குறைந்த அளவே வீரர்கள் இருந்தார்கள். அதனால் முஹ்ம்மது(ஸல்) அவர்களும், அவரின் படை வீரர்களும் போரை எண்ணி அச்சமடைந்தார்கள்.அதனால் அல்லாஹ், முஹ்ம்மது(ஸல்) அவர்களிடம் கூறுகிறான், "முஹம்மதே பயப்படாதீர்கள், அவர்களை தைரியமாக எதிர்த்து போரிடுங்கள் உங்களுக்கு உதவுவதற்க்காக ஆயிரம் வானவர்களை நான் அனுப்பி வைப்பேன்,……….


…….


இவ்வாறு அல்லாஹ் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு கட்டளை இடுகிறான்.ஒரு போரில், படை தலைவருக்கு கூறப்பட்ட செய்தியை நீங்கள் தவறாக எண்ணி விட்டு, இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதாக கூறுகிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல பலர், இன்னும் சொல்லப்போனால் சில முஸ்லிம்களும் இதை தவறாக கருதிக்கொண்டு அப்பாவி மக்களை அநியாயமாக கொல்கிறார்கள். formats mine


மேலே உள்ள அஷேக் அவர்களின் விளக்கங்களிலிருந்து:

• அது எந்த போர்?


• அதை ஆரம்பித்தது யார்?


• அந்த வியாபார ஆயுதமில்லாத கூட்டம் என்றால் என்ன?


• போர் செய்யும் போது வியாபாரிகள் எங்கே வந்தார்கள்?


• ஆயுதமில்லாமல் யார் போருக்கு வருவார்கள்?


• அப்படி வந்தவர்கள் யார்?


• பத்ரூ என்ற இடத்தில் நடந்த சண்டையை முதலில் துவக்கியது யார்?



போன்ற கேள்விகளுக்கு விளக்கம் தெரிந்துக்கொண்டால், முஹம்மது செய்த போர்களின் நிலை என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இஸ்லாம் அமைதி மார்க்கமா? என்பதை தெரிந்துக் கொள்ளலாம். சகோதரர் அஷேக் அவர்கள் பின்னணியை விளக்குகிறேன் என்றுச் சொல்லி மேலோட்டமாக விளக்கியுள்ளார், இந்த மேலோட்ட விளக்கத்தை வைத்துக்கொண்டு, நாம் உண்மை இஸ்லாமை அறிய முடியாது. எனவே, பத்ரூ போர் குறித்து ஒரு சிறு குறைப்பை தரலாம் என்று விரும்புகிறேன்.

பத்ரு போர் பற்றிய சிறு குறிப்பு


போரின் பெயர்: பத்ரு போர் (Battle of Badr)


இடம்: பத்ரு (மதினாவிலிருந்து 130 கிலோ மீட்டர் தூரமுள்ள இடம்)


காலம்: கி.பி. 624 மார்ச் 17, (ரமலான் 17ம் நாள்)


எத்தனை பேர் பங்கு பெற்றனர்: முஸ்லீம்கள் 313, குரைஷிகள் 900 - 1000 பேர்


போரின் விளைவு: இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றனர்.


மரணம்: 14 பேர் முஸ்லீம்கள் மரணம், குரைஷிகள் 70 பேர் மரணம் மற்றும் குரைஷிகள் 40-70 பேர் கைதிகளாக பிடிபட்டனர்.


Source: http://en.wikipedia.org/wiki/Battle_of_Badr



பத்ரு போரா அல்லது கொள்ளைக்கூட்ட சண்டையா?


மக்காவில் வாழும் போது, முஹம்மது தன்னை ஒரு நபி என்றுச் சொல்லிக்கொண்ட பிறகு, அவர் 10 வருடங்களுக்கு மேலாக மக்கா மக்களுக்கு தன் மார்க்கத்தைப் பற்றி போதித்தார், சிலர் மட்டும் ஏற்றுக்கொண்டனர், மக்கா மக்கள்(குரைஷிகள்) அவரை ஒரு நபி என்று ஏற்கவில்லை, அவருக்கு தொல்லை தந்தனர், கொடுமைப்படுத்தினர். அந்த தொல்லையை தாங்க முடியாமல், மக்காவிற்கு முஹம்மதுவும் புதிய இஸ்லாமிய விசுவாசிகளும் மதினாவிற்கு கிபி 622ம் ஆண்டு, இடம் பெயர்ந்தனர், இதனை ஹிஜ்ரா என்றுச் சொல்வார்கள்.


முஹம்மது வெறும் போர்கள் தான் புரிந்தார் என்று எல்லாரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால், "வழிப்பறிக் கொள்ளை கூட" புரிந்துள்ளார். அப்படி வழிப்பறிகொள்ளை தான் இந்த பத்ருபோர். இதனை பத்ரு போர் என்றுச் சொல்வதை விட, பத்ரு கொள்ளை என்றுச் சொலவது சால பொருந்தும்.


முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகி, 624ம் ஆண்டு, மக்கா குரைஷி வியாரிகள் சிரியாவிலிருந்து வியாரம் புரிந்து, பொருட்களோடு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் மதினா வழியாகத் தான் வரவேண்டும், அதாவது, மதினாவிற்கு 100 க்கும் அதிமான‌ கிலோ மீட்டர் தூரமாகத் தான் அவர்கள் பிராயணம் செய்துக்கொண்டு இருந்தார்கள்.


இந்த செய்தியை கேள்விப்பட்ட முஹம்மது தன்னோடு 313 பேரை அழைத்துக்கொண்டு, அந்த வியாபாரிகளை தாக்கி, அவர்களிடமுள்ள பொருட்களை கொள்ளையடிக்க திட்டமிட்டார், அதே போல, பிராயாணப்பட்டுப் போனார். இதை "போர்" என்றுச் சொல்லலாமா? அல்லது "கொள்ளை" என்றுச் சொல்லலாமா? இஸ்லாமியர்கள் தான் சிந்திக்கவேண்டும்.


முஹம்மது தன் கூட்டத்தோடு, தங்கள் வியாபாரிகளை தாக்கப்போகிறார் என்ற செய்தியை மக்காவின் குரைஷிகள் அறிந்த போது, அவர்கள் 1000 பேரோடு, தங்கள் வியாபாரிகளை காப்பாற்ற வந்தனர்.


மதினாவிற்கு 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்ரு இடத்தில் இரண்டு கூட்டமும் சண்டையிட்டது, சண்டையின் போது, முஹம்மது மண்ணை தன் கைகளால் வாரி அவர்கள் மீது இறைத்து, இதோ தூதர்கள் இறங்கி உதவி செய்கிறார்கள் என்றார். இஸ்லாமியர்கள் 313 பேர், ஆயிரம் பேரை துரத்தினார்கள், வெட்டினார்கள், வெற்றிப் பெற்றார்கள். இந்த போரில் அல்லா தன் தூதர்களைக் கொண்டு உதவியதாக அல்லா குர்‍ஆனில் சொல்கிறார்.


குரைஷிகள் 70 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் கிட்டத்தட்ட 70 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இஸ்லாமியர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.


இந்த கொள்ளையில் கிடைத்த பொருட்களில் 20% முஹம்மதுவிற்கும், இதர தர்மம் செய்வதற்கும் ஒதுக்கப்பட்டு, மீதியுள்ள 80% பொருட்கள் போரில் ஈடுபட்டவர்களுக்கு பகிர்ந்து தரப்பட்டது. இஸ்லாமியர்கள் ஏன் போரில்/இப்படிப்பட்ட சண்டையில் அதிகமாக ஈடுபட்டார்கள் என்று சிந்தித்தால், ஒன்று மட்டும் தெளிவாக புரியும், அதாவது, சண்டைபோட்டு உயிரோடு இருந்தால், பொருட்கள் கிடைக்கும், மரித்துவிட்டால் சொர்க்கம் கிடைக்கும், எப்படி பார்த்தாலும், வாழ்ந்தாலும் லாபம் செத்தாலும் லாபம்.


 
Quote:
(முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்கிளிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (8:41)


இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு 10 முக்கிய காரணங்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி, இந்த கட்டுரைக்கு சம்மந்தபப்ட்டு கீழே பதிக்கிறேன்.

 
Quote:
4. முஹம்மது மக்காவின் வர்த்தகர் கூட்டத்தின் (caravans) மீது தீவிரத் தாக்குதல்கள் நடத்துகிறார்


Muhammad aggressively attacks Meccan caravans



கி.பி. 622ல் முஹம்மது மக்காவிலிருந்து மதீனா வரையிலான ஹிஜ்ராவிற்கு பிறகு சுமார் ஓராண்டிற்குப் பின்பு, அவர் மக்காவின் வர்த்தகர் கூட்டங்களின் (caravans) மீது ஆறு முறை தாக்குதல்க‌ள் நடத்தினார். மேலும் மதீனாவின் மேய்ச்சல் ஒட்டகங்களை (அல்லது கால் ந‌டைகளை) திருடிக்கொண்டு மூன்றுநாள் தொலைவில் சென்ற அரபுக் கூட்டத்தினரைத் தண்டிப்பதற்காக பின் சென்றதையும் சேர்த்து மொத்தம் ஏழு முறை தாக்குதல் நடத்தியுள்ளார்.


முஹம்மதுவிற்கு ஆதரவாக எழுதும் பிரபல மேற்கத்திய நாட்டினரும் இஸ்லாமின் சரித்திர ஆராய்ச்சியாளருமான W. Montgomery Watt என்பவர் எழுதிய இரு புத்தகங்கள் அடங்கிய சரித்திர நூல்கள் ஆரம்ப கால இஸ்லாம் பற்றியவை. பெரும்பாலானவர்களின் அங்கீகாரத்தினைப் பெற்ற இந்த சரித்திரம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது, "மக்காவில் முஹம்மது (1953) மற்றும் மதீனாவில் முஹம்மது (1956)" என்பனவாகும். இப்புத்தகங்கள் எவ்விதம் புவியியல் முக்கிய‌மாக அமைந்தது என்பதை விளக்குகின்றன‌.


இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் முஸ்லீம்கள்தான் முதலில் படையெடுத்தார்கள் என்பதே. ஏழு படையெடுப்புகளில் ஒன்றைத்தவிர மற்ற‌வை அனைத்தும் மக்காவின் வர்த்தகர் கூட்டத்தை (Caravans) நோக்கித் தான் ஏவப்பட்டன. மக்காவிலிருந்து சிரியா செல்லும் வர்த்தகர் கூட்டம் மதீனாவையும் கடற்கரையையும் கடந்துதான் செல்லவேண்டும். கூடுமான வரை செங்கடலை ஒட்டியே சென்றாலும், மதீனாவிலிருந்து சுமார் எண்பது மைல் தொலைவில்தான் கடந்துச் செல்ல வேண்டும். எதிரியின் முகாம் இந்தத் தொலைவில் இருந்தாலும் அவர்களின் சொந்த முகாம் இரு மடங்கு தூரத்தில் தான் இருக்கும்.(மதீனாவில் முஹம்மது பக்கம் 2, emphasis added )


The chief point to notice is that the Muslims took the offensive. With one exception the seven expeditions were directed against Meccan caravans. The geographical situation lent itself to this. Caravans from Mecca to Syria had to pass between Medina and the coast. Even if they kept as close to the Red Sea as possible, they had to pass within about eighty miles of Medina, and, while at this distance from the enemy base, would be twice as far from their own base. (Muhammad at Medina, emphasis added, p. 2)


Source: இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள் (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை)


பத்ரு போருக்கு பின் முஹம்மதுவின் செயல்கள்:


முஹம்மது பத்ரு போரில் வெற்று பெற்று மதினா திரும்பிய பிறகு, மதினாவிலிருந்து யூதர்களை துரத்தினார், தன்னை எதிர்த்து கவிதை எழுதியவர்களை கேலி செய்தவர்களை கொன்று போட்டார். ஆனால், முஹம்மது மதீனாவிற்கு தஞ்சம் புகுந்தவுடன் அவர் ஜனாதிபதியாக ஆகிவிட்டார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள், இது உண்மையல்ல. மதினா மக்களில் சிலர் இவரோடு சேர்ந்துக்கொண்டு மற்றவர்களை கொலை செய்துக்கொண்டுவருவதை, எதிர்த்தவர்களை, பேசியவர்களை இவரும் இவரது தோழர்களும் கொலை செய்தார்கள். இவர் மதீனாவிற்கு வந்தவுடன், இவர் தலையில் கிரீடம் வைத்து யாரும் இவரை ஜனாதிபதி என்று ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கவனிக்கவும்.


பத்ரூ போருக்கு பின்பு அமைதி மார்க்கத்தின் கொலைகளை அறிய படிக்கவும்: His enemies to be assassinated


பத்ரூ போருக்கு பின்பு செய்யப்பட்ட சில கொலைகளை தமிழ் கட்டுரையிலிருந்து


 
Quote:

மார்ச் மாதம் கி.பி. 624: அக்பா பின் அபூமுயத்(Uqba bin Abu Muayt)


அக்பா மக்காவில் முஹம்மதுவை மதிப்புக் குறைவாக விமர்சித்து எழுதி கேலி செய்தார். அவ‌ர் பத்ரூ போரில் பிடிக்க‌ப்ப‌ட்ட‌போது முஹம்மது அவருக்கு ம‌ர‌ண‌ த‌ண்டனையை வழங்கினார். அப்போது அக்பா மிகுந்த ம‌ன‌ச்ச‌ஞ்ஞ‌ல‌த்துட‌ன் "முஹம்மதுவே! என் பிள்ளைக‌ளை யார் காப்பாற்றுவார்க‌ள்?" எனக் கதறினார். உனக்கு "நரகம்" தான் என்று நபி அமைதியாக கூறினார். அதன் பின்பு இறைத்தூதரின் அடியார்க‌ளுள் ஒருவ‌னின் வாள் அக்பாவின் கழுத்தை வெட்டியது.


மார்ச் மாதம் கி.பி. 624: அஸ்மா பின்ட் மர்வன் (Asma bint Marwan)


அஸ்மா (Asma) என்பவள் மதீனாவில் உள்ள ஒரு பழங்குடி மதக் கூட்டத்தினைச் சேர்ந்த பெண் கவிஞர் ஆவார். யாஜித் பி. ஜையத் என்பவன் அவளது கணவனாவார். அவள் மதீனாவின் தன் பழங்குடி மக்களை, அவர்கள் ஒரு புதியவரான முஹம்மதுவுக்கு அடிபணிந்து, அவர்மீது எதிபாராத தாக்குதல் நடத்தாமலிருந்ததாகக் குறை சொல்லி ஒரு பாடல் இயற்றினாள். அவள் சொன்னதைக் கேள்விப்பட்ட இறைத்தூதர், "எனக்காக அந்த மார்வானின் மகளை அழிப்பவர் யார்?" என்றார். அவளது கணவனின் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன், முன்வந்து, அன்றிரவு அவளின் வீட்டிற்குள் பதுங்கிச் சென்றான். அவளுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தன; அவர்களில் கடைக்குட்டி அவளின் மார்பில் உறங்கிக்கொண்டிருந்தான். தாக்குதலுக்குச் சென்றவன் அந்தக் குழந்தையை மெதுவாக அவளின் மார்பிலிருந்து விலக்கிவிட்டு, அவனது வாளை உருவி அவள்மீது பாய்ச்சி அவளைத் தூக்கத்திலேயே கொன்றான்.


மறுநாள் காலையில் அந்தக் கொலைகாரன், அவன் மீது பழிவாங்குபவர்கள் யாரேனும் உள்ளனரா எனச் சவாலிட்டான். அவளது கணவன் உள்ளிட்ட ஒருவரும் அந்த சவாலுக்கு மறுமொழி கூறவில்லை. உண்மையில், அவனது கூட்டத்தில் இஸ்லாம் வலுப்பெற்றிருந்தது. முன்பு இரகசியத்தில் மாறினவர்கள் கூட பகிரங்கமாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர் என்று அறிவித்தனர். இந்தத் தாக்குதலை விவரிக்கும் ஆரம்பகால‌ இஸ்லாமியத் தகவல் ஆதாரம் ஒன்று, "இஸ்லாமின் வலிமையை அவர்கள் கண்டார்கள் – because they saw the power of Islam" என சொல்கிறது.


Source: [url= http://www.answering-islam.org/tamil/authors/arlandson/ten_reasons.html]இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள் (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை)[/url]



பத்ரு போரா அல்லது வழிப்பறி கொள்ளையா?

குர்‍ஆன் எட்டாம் அதிகாரத்தின் பின்னணி இப்போது ஓரளவிற்கு புரிந்திருக்கும், இப்போது படியுங்கள் குர்‍ஆன் 8ம் அதிகார வசனங்களை.


 
Quote:
(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான். (8:7)


(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான். (8:17)


(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (8:42)


இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலை இப்போது உங்களால் தரமுடியுமா என்று பாருங்கள்.


• அது எந்த போர்?

• அதை ஆரம்பித்தது யார்?

• அந்த வியாபார ஆயுதமில்லாத கூட்டம் என்றால் என்ன?

• போர் செய்யும் போது வியாபாரிகள் எங்கே வந்தார்கள்?

• ஆயுதமில்லாமல் யார் போருக்கு வருவார்கள்?

• அப்படி வந்தவர்கள் யார்?

• பத்ரூ என்ற இடத்தில் நடந்த சண்டையை முதலில் துவக்கியது யார்?



குர்‍ஆன் 8:7ம் வசனத்தைப் பாருங்கள், "ஆயுதமில்லாமல் இருக்கும் வியாபாரிகளை" மட்டும் கொள்ளையடித்தால் போதும் என்று இஸ்லாமியர்கள் விரும்பினார்களாம், ஆனால், மக்காவிலிருந்து வந்த எதிரிகளை கூட அல்லா கொடுத்துவிட்டாராம்.

வியாபாரிகளை கொள்ளையடிக்க உதவிய அல்லாவை நாம் காண்கிறோம்.

நான் சொல்வது தவறு, பத்ரு இடத்தில் நடந்தது போர் தான் மற்றும் குரைஷிகள் தான் அதனை ஆரம்பித்தார்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்லக்கூடும். இதற்காகவே, இஸ்லாமியர்களால் மிகவும் அதிகமாக மதிக்கும் இபின் கதிர் குர்‍ஆன் உரையின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்.


 
Quote:
[size] Ibm Kathir Commentary
The people started mobilizing Muslims, although some of them did not mobilize, thinking that the Prophet would not have to fight. Abu Sufyan was cautiously gathering information on the latest news spying on travelers he met, out of fear for the caravan, especially upon entering the area of Hijaz (Western Arabia).Some travelers told him that Muhammad had mobilized his companions for his caravan. He was anxious and hired Damdam bin `Amr Al-Ghifari to go to Makkah and mobilize the Quraysh to protect their caravan, informing them that Muhammad had mobilized his Companions to intercept the caravan. Damdam bin `Amr went in a hurry to Makkah. Meanwhile, the Messenger of Allah marched with his companions until he reached a valley called Dhafiran. When he left the valley, he camped and was informed that the Quraysh had marched to protect their caravan. The Messenger of Allah consulted the people for advice and conveyed the news about Quraysh to them. Abu Bakr stood up and said something good, and so did `Umar. Al-Miqdad bin `Amr stood up and said, `O Allah's Messenger! March to what Allah has commanded you, for we are with you. By Allah! We will not say to you what the Children of Israel said to Musa,


Source: http://www.tafsir.com/default.asp?sid=8&tid=19613
[/size]


ஒரு இடத்திலிருந்து வியாபாரிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் போது, அவர்களை தாக்குபவர்களை என்னவென்றுச் சொல்வது? போர் வீரர்கள் என்பதா அல்லது கொள்ளைக் கூட்டத்தார்கள் என்பதா? வழிப்பறிக் கொள்ளையை போர் என்று சொல்லமுடியுமா ? சிந்தியுங்கள்.

நான் சொல்வது தவறு என்றுச் சொன்னால், எப்படி என்று விளக்குங்கள்.


பத்ரு போர் குறித்து, பிஜே அவர்களின் குர்‍ஆன் உரையிலிருந்து விவரங்கள்:

இந்த கட்டுரைக்கு தேவையான விவரங்களுக்காக, குர்‍ஆனை தமிழில் மொழிபெயர்த்த அருமை இஸ்லாமிய அறிஞர் பிஜே அவர்களின் குர்‍ஆனிலில் அவர் கூறியிருக்கும் உரையை கீழே தருகிறேன். தேவைப்பட்டால், அவரின் பத்ரு போர் பற்றிய உரைக்கு தனியாக ஒரு பதிலை பிறகு காணலாம். இப்போதைக்கு அவரின் உரையிலிருந்து ஒரு சில கேள்விகள், அவரை நோக்கி எழுப்பப்படுகின்றன.

கீழே உள்ள அவரது உரையிலில் அடிக்கோடிட்ட தடிமன‌ (Underline, Bold) வரிகளைக் காணுங்கள், அடிப்பிற்குள் [] இருக்கும் வரிகள் என்னுடையை வரிகள்.


 
Quote:
196. திட்டமிட்டிருந்தால்

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பத்ருப் போரை எதிர்பார்த்துப் புறப்படவில்லை. மாறாக தமது நாட்டு எல்லையில் புகுந்து மக்காவின் வணிகக்கூட்டம் பயணிக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அவர்களை வழி மறிக்கவே புறப்பட்டார்கள். ["தமது நாடு" என்று எழுதுகிறார் பிஜே அவர்கள், 622ல் மதீனாவிற்கு தஞ்சம் புகுந்து, 624ல் எப்படி "மதீனா" இஸ்லாமியர்களின் நாடு ஆனது?]

ஆனால், இதை கேள்விப்பட்டு மக்கா வாசிகள் படை திரட்டிக் கொண்டு வந்ததால் எதிர்பாராமல் பத்ருப் போரைச் சந்திக்கும் நிலைமை உருவானது. அதைத் தான் இவ்வசனம் (திருக்குர்‍ஆன் 8:42) கூறுகிறது.

http://www.onlinepj.com/vilakkam/vilakkam4.htm

358. அல்லாஹ்வின் வாக்கு

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு விரட்டப்பட்டு அங்கே ஒரு ஆட்சியை நிறுவினார்கள். அவ்வாறு நிறுவிய பின் முஸ்லீம்களின் எதிரி நாட்டவரான மக்காவாசிகள் தமது வியாபாரப் பயணத்தை மதீனா வழியாக மேற்கொண்டு வாந்தனர்.

எனவே தமது நாட்டுக்குள் சட்ட விரோதமாகப் புகுந்து பயணம் செய்யும் எதிரிகளைத் தடுத்து நிறுத்திட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள். இந்த நிலையில் மக்காவின் முக்கியப் புரமுகர் அபூஸூஃப்யான் தலைமையில் ஒரு வணிகக்கூட்டம் இஸ்லாமிய நாட்டு எல்லையில் புகுந்து செல்லும் தகவல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.

அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படையுடன் புறப்பட்டனர். இச்செய்தி மக்காவில் உள்ள தலைவர்களுக்குக் கிடைத்து, அவர்கள் தமது வணிகக் கூட்டத்தைக் காப்பாற்றும் நோக்கில் படை திரட்டி வந்தனர்.

வணிகக்கூட்டத்தை வழி மறிப்பதா? அல்லது போருக்குப் புறப்பட்டு வரும் கூட்டத்துடன் மோதுவதா? என்ற சிக்கல் முஸ்லீம்களுக்கு ஏற்பட்டது. இரண்டில் முஸ்லீம்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதில் வெற்றி என்று இறைவன் புறத்திலிருந்து வாக்களிக்கப்பட்டது. இரண்டில் ஒரு கூட்டத்தை உங்களுக்கு அல்லாஹ் வாக்களித்ததை நினைத்துப் பாருங்கள் என்று இங்கே (திருக்குர்‍ஆன் 8:7 வசனத்தில்) இதைத் தான் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

போருக்கு வருவோரை எதிர்கொள்வதென முஸ்லிம்கள் இறுதியில் முடிவு செய்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். …..

http://www.onlinepj.com/vilakkam/vilakkam8.htm

பிஜே அவர்களின் விவரங்கள் சொல்கின்றன:


1) முஹம்மது அவர்கள் மதீனாவில் ஆட்சி அமைத்தாராம். [எப்போது அமைத்தார்?]


2) மதினாவில் சட்டவிரோதமான வணிகக்கூட்டம் வந்ததாம். [இவரே அந்த நாட்டில் தஞ்சம் புகுந்து 2 ஆண்டுகள் ஆனது, அதற்குள் மதீனா இஸ்லாமிய நாடாகிவிட்டதோ, இந்தியாவில் ஆங்கிலேயர்கள் புகுந்து இந்நாட்டை தங்கள் நாடு என்று உரிமை கொண்டாடியது போல, இதுவும் உள்ளது]


3) அவர்களை தாக்கி, அவர்களின் பொருட்களை பறிமுதல்(நான் இதனை வழிப்பறிக் கொள்ளை என்பேன்) செய்ய ஒரு கூட்டத்துடன் முஹம்மது சென்றார்கள்.


4) தங்கள் வணிக கூட்டத்தை முஹம்மது தாக்கி பொருட்களை பறிமுதல் செய்வார்கள் என்று மக்காவாசிகள் அறிந்து பெரும்படையுடன் வந்தார்கள்.


5) பிறகு அவர்களிடம் சண்டையிட்டு, வெற்றிப் பெற்றார்கள்.


பிஜே அவர்களுக்கு தனியாக ஒரு பதிலை எழுதுவேன், அதில்


முஹம்மது மதினாவில் எப்போது தனது ஆட்சியை அமைத்தார்? கிபி 624ம் வருடமே, மதீனா இஸ்லாமிய நாடாக மாறிவிட்டதா?


உண்மையில் 130 கிலோமீட்டர் தொலைவில் வணிகர்கள் செல்வது, மதீனாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துச் செல்வதாகுமா?


முஹம்மது மற்றும் இதர வணிகர்கள் தாங்கள் வியாபாரம் முடித்து வந்த போது, மதீனாவிற்கு எத்தனை கிலோமீட்டர் தூரமாக சென்றார்கள், அப்போது மதீனா மக்கள் இவரோடு சண்டையிட்டு பொருட்களை பறிமுதல் செய்தார்களா?


வணிகர்களை தாக்கச் சென்றவர்களை "போர் வீரர்கள் என்பதா" அல்லது கொள்ளையடிக்க சென்ற "ஒரு கூட்டம் என்பதா?".


போன்ற கேள்விகளையும் இன்னும் அனேக விவரங்களையும் காணலாம்.


இந்த கட்டுரைக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக பிஜே அவர்கள் "பத்ரூ" பற்றி கூறிய விவரங்களை மட்டும் தரலாம் என்று நினைத்து இவைகளைக் கூறினேன்.


அருமை அஷேக் அவர்களே,


நீங்கள் உடனே, இந்த தலைப்பை விட்டுவிட்டு வேறு தலைப்பிற்கு தாவாமல், இதைப் பற்றி விவாதம் புரிய விருப்பமானால், மார்ஸ் மேடையில் உள்ள இக்கட்டுரையில் பின்னூட்டமிடுங்கள், நாம் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை தொடர்வோம். தனி மெயில் அனுப்பி உறுப்பினர்களிடம் கேட்கவேண்டாம், [விவாதம் புரியவேண்டுமானால், வீரன் வீரனிடம் போரிடவேண்டும், நாட்டின் குடிமக்களிடம் அல்ல, ஏனென்றால் சாதாரண குடிமக்களுக்கு எதிரிகளின் யுக்திகள் பற்றிய பயிற்சி இருக்காது.] ஏனென்றால், இஸ்லாம் குறித்த பின்னணிகள் இன்னும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு அவ்வளவு அதிகமாக தெரியாது(முஸ்லீம்களுக்கு கூட).


உங்களின் பதிலில் ஒரு பகுதிக்கு மட்டுமே நான் இப்போது பதில்/மறுப்பு எழுதினேன், இன்னும் உங்கள் அனேக வரிகள் அப்படியே உள்ளன, நீங்கள் விரும்பினால் தொடர்வோம்.


கிறிஸ்தவர்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வாழ்ந்துச் சென்ற இயேசுக் கிறிஸ்துவையும், அவரை பின்பற்றி தியாக வாழ்க்கை வாழ்ந்த அவரது சீடர்களையும் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.


இப்படி வணிகர்களை கொள்ளையடிப்பவரையும், அவரை எதிர்த்து கவிதை எழுதி, விமர்சித்து, கேலி செய்தவர்களை கொடூரமாக கொன்ற உங்கள் முஹம்மது அவர்களை நாங்கள் எப்படி குறைந்த பட்சம் ஒரு நல்ல மனிதராக நினைத்துப் பார்க்கமுடியும். வேண்டுமானால், உலக வரலாற்றில் வந்துச் சென்ற அனேக அரசர்களில் தலைவர்களில் இவரும் ஒருவர் என்று நினைப்போம் எனவே, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்றுச் சொன்ன இயேசுவின் வாழ்க்கையை நீங்கள் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.


கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிவில் சந்திப்போம்.

 

 
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails