முதல் காட்சி
1896 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி நியூயார்க்கிலுள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மியூசிக் ஹாலில் "வாட்வில்லி குழுவினரால் இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி.
முதல் மௌனப்படம்
1903 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட "ஒரு அமெரிக்கத் தீயணைப்புப் படைவீரனின் வாழ்க்கைப் படம்தான் முதல் மௌனப்படம்.
முதல் வசனம்
உலகின் முதல் பேசும்படம் 1927 ஆகஸ்ட்டில் வந்தது வார்னர் பிரதர்ஸ் தயாரித்த "ஜாஸ் பாடகன்" நடிகர் ஆல் ஜால்சன் நடித்தார், பாடினார். பேசும் படத்தில் முதலில் பேசப்பட்ட வசனம் "நீங்கள் இதுவரை ஒன்றும் கேட்கவில்லை" என்பதே.
முதல் தங்கப்பதக்கம்
முதன் முதலாய் அந்நாளிலேயே திரையில் திறந்த தோள்பட்டையைக் காட்டி, சட்டையைக் குறைத்துக் கொண்டு பின்புறம் முதுகு தெரியும்படி கவர்ச்சி காட்டி "பிளாட்டினம் பிளாண்ட்" எனும் பெயரை ரசிகர்களிடம் பெற்றவர் நடிகை ஜீன்ஹார்லோ தான்.
முதல் ஆஸ்கார் அவார்டு
மிகச்சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படும் அகாடமி அவார்டை முதன் முதலாய்ப் பெற்றது. 1927-ல் வெளியான ஒரு ஊமைப்படம்தான்(இந்த அகாடமி அவார்டுதான் தற்போதைய ஆஸ்கார் விருதாக மாறியது). இந்தப்படத்தை இப்போது பார்த்தாலும் கூட திரில் ஏற்படுமாம். இந்தப்படத்தின் பெயர் இறக்கைகள்(Wings)
No comments:
Post a Comment