(மேலதிக இணைப்பு) தாய்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்;இரவு விடுதியில் தீ விபத்து;60 பேர் மரணம்; 200 பேர் காயம் |
|
![]() அங்குள்ள "டாஸ்மேட்டி" என்ற இரவு விடுதியில் நடனத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.400-பேர் திரண்டு இருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் நடன குழுவினர்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தனர்.அப்போது நடன அரங்கில் பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடினார்கள். அப்போது நடன அரங்குக்குள் தீ பிடித்துக்கொண்டது.அரங்கு முழுவதும் தீ வேகமாக பரவியது.அதில் இருந்து தப்பிக்க வெளியே ஓடினார்கள்.அப்போது நெரிசல் ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். அவர்களும் தீயில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் 60-பேர் உடல் கருகி பலியானார்கள்.நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.பலருடைய உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி கிடந்தன.இறந்தவர்களில் பலர் வெளி நாடுகளை சேர்ந்தவர்கள். |
No comments:
Post a Comment