35-அமைப்புகளுக்கு இஸ்ரேல் அரசு தடை |
|
அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 35-அமைப்புகளை,பயங்கரவாத அமைப்புகளாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.இந்த அமைப்புகள் எல்லாம் பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்படுபவை.மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில்,யூதர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து,உலக பயங்கரவாதம்,இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து, அந்நாட்டு அமைச்சரவை சமீபத்தில் விவாதித்தது.இதன்பின்,தடை முடிவு எடுக்கப்பட்டது.இனி,இந்த பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் கண்காணிக்கப் படுவதோடு,அந்த அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவதும் கண் காணிக்கப்பட்டு தடை செய்யப்படும். மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பயங்கரவாத அமைப்புகள் எல்லாம்,இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை எந்த விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றாலும்,பயங்கரவாதத்தை கட்டுப் படுத்த உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவும் வகையில்,இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என,இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில்,இஸ்ரேலும்,ஹமாஸ் பயங்கரவாதிகளும் தங்கள் பகுதியில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என,ஐரோப்பிய யூனியன்,ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை கேட்டுக்கொண்டுள்ளன. |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1230801170&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment