சிட்னியில் நடந்து வரும் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய தென்ஆப்ரிக்கா ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்ட்ரேலியா இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்தது. மிட்செல் ஜான்சன் சிறப்பாக விளையாடி 64 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய ஹவ்ரிட்ஸ் 41 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் மைக்கேல் கிளார்க் அபாரமாக விளையாடி சதமடித்தார். இதன் காரணமாக ஆஸ்ட்ரேலிய அணியின் ரன் எண்ணிக்கை 350ஐ கடந்தது. கிளார்க் 138 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைநிலை ஆட்டக்காரர் சிடில் 23 ரன்கள் சேர்த்தார். இன்னிங்சின் 136வது ஓவரில் ஆஸ்ட்ரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களில் ஸ்டெய்ன், ஹாரிஸ் தலா 3 விக்கெட்டுகளும், நிடினி, மோர்கெல், காலிஸ், டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய தென்ஆப்ரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர் மெக்கன்ஸி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் கிரேம் ஸ்மித் 30 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். ஹஸ்ஹிம் ஆம்லா 30 ரன்கள், ஜாக் காலிஸ் 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர். |
Tuesday, January 6, 2009
ஆஸ்ட்ரேலியா 445-ரன் குவிப்பு:தென்ஆப்ரிக்கா-125/1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment