|
|
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் 3 சகோதரிகள் உட்பட 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர். |
விசுவமடு மகாவித்தியாலயத்தை அண்மித்த பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். நிரந்தரமாகவும் இடம்பெயர்ந்தும் மிகச் செறிவாக வாழும் பகுதி மீது எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியதால் மக்கள் பேரவலத்திற்குள்ளானதோடு வீடுகளும் பயன்தரு மரங்களும் அழிவடைந்துள்ளன. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட 3 சகோதரிகளின் தாயார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விசுவமடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான மயூரி (வயது 19) சுஜீதா (வயது 14) சுஜீவனா (வயது 16) ஆகியோருடன் முதியவர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். அவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. சுலக்சன் (வயது 12) நிசாந்தன் (வயது 13) உதயகுமார் (வயது 16) கஜந்தன் (வயது 16) சுகுமார் யுதயகுமார் (16) பிரதீபன் (வயது 18) சுகிர்தா (வயது 18) பரமேஸ்வரி ( வயது 62) நாகேஸ்வரி (வயது 83) மனோகரன் (வயது 49) சுதாகரன் (வயது 40) குணறஜனி (வயது 37) றுக்மணி (வயது 89) கனகரட்ணம் (வயது 60) உதயமலர் (வயது 57) மார்க்கண்டு (வயது 64) இராமசாமி மணியம் (வயது 50) வீரபத்திரன் பரமேஸ்வரன் (வயது 62) கணேசன் சந்திரமலர் (வயது 57) செல்லப்பா சேதுப்பிள்ளை (வயது 100) ஆகியோர் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
source:puthinam
No comments:
Post a Comment