Monday, October 6, 2008

தளி அருகே மாதா சிலைகள் உடைப்பு பதற்றம்-போலீசார் குவிப்பு



தேன்கனிக்கோட்டை, அக்.6-

தளி அருகே மாதா சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேவாலயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ளது மதகொண்டப்பள்ளி கிராமம். அங்கு சொல்லேபுரம் செல்லும் சாலையில் எமது மாதா என்ற ரோமன் கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நுழைவு வாயில் அருகில் சிறிய அளவிலான ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் 21/2 அடி உயரத்தில் ஒரு மேரி மாதா சிலையும், 4 அடி உயரத்தில் மற்றொரு சிலையும் வைக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் யாரோ வந்து பள்ளி முன்பு உள்ள ஆலயத்தில் இருந்த 21/2 அடி உயரமுள்ள மேரி மாதா சிலையை உடைத்து சேதப்படுத்தி பள்ளி காம்பவுண்டு சுவர் ஓரத்தில் வீசியுள்ளனர். அதேபோல் 4 அடி உயரமுள்ள மற்றொரு மேரி மாதா சிலையையும் மர்ம மனிதர்கள் உடைத்து உள்ளனர். இந்த சிலையை காணவில்லை.

போலீசார் குவிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து மோப்ப நாய் ரோபோ மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களையும், கைரேகையையும் பதிவு செய்தனர்.

மாதா சிலை உடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=442963&disdate=10/6/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails