சர்ச்சைக்குரிய சாத்தானின் கவிதைகள் நாவலை எழுதியது குறித்து வருத்தமில்லை என்று சல்மான் ருஷ்டி கூறியுள்ளார்.20 ஆண்டுகளுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகள் நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது இஸ்லாமுக்கு விரோமாக இருக்கிறது என்று கூறி அப்போதை ஈரான் அதிபர் கோமேனி அவருக்கு மரண தண்டனை விதித்தார். இதையடுத்து ருஷ்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், முகமது நபி தொடர்பாக புதிய புத்தகம் ஒன்று வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ள பதிப்பகம் தாக்கப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ருஷ்டி இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். மதம் மற்றும் தத்துவம் சார்ந்த முக்கிய கேள்விகளை எழுப்பும் படைப்புகளை எழுத தாம் தயங்கியதில்லை என்றும், சாத்தானின் கவிதைகள் நாவல் எழுதியதற்காக வருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார் |
No comments:
Post a Comment