இன்று தேசமே காந்தியடிகளாரின் பிறந்த நாளை கொண்டாடிகொண்டு இருக்கிறது. நாட்டிற்கு சுதந்திரம் அகிம்சை முறையில் பெற்று தந்த மகானின் பிறந்த இன்நன்நாளில் எல்லா இந்தியர்களும் வெட்கபடும் அளவிற்கு ஒரிசாவில் கலவரம் நடந்துகொண்டிருக்கிறது.
சமுதாய சேவைக்காக கடந்து சென்றுள்ள அன்னை தெரசா மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திர்க்கு நேர்ந்த கொடுமை நிச்சயம் மனித நேய ஆர்வலர்கள் அனைவருக்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவமாகும். செப்டம்பர் 30ந் தேதியிட்ட தி ஹிந்து நாளிதலின் முதல் பக்கத்தில் வந்த செய்தியே அது. இது போல் நடந்த சம்பவம் வெளியே வராமல் இருந்தது எத்தனையோ கடவுளே அறிவார்.
28வயது மதிக்கதக்க இறைபணியாற்றும் அருட்சகோதரியை மதவாத இயக்கத்தை சேர்ந்த ஒரு கும்பல் (மன்னிக்கவும் இதை மதவாத இயக்கம் என்பதை இனி இந்து மத தீவிரவாதிகள் என சொல்வதுதான் சரியாக இருக்கும்) இழுத்து வந்து அவருடைய ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல்துறையினரின் முன்னிலையிலேயே இந்த கொடுமை நடந்துள்ளது. இந்த அருட்சகோதரி காவல்துறையினரின் காலைபிடித்து காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என அவர்களே இந்த கும்பலிடம் ஒப்படைத்துவிட்டனர்.
மேலும் அருட்பணீயாற்றும் சகோதரரையும் அவருடைய ஆடைகளை களைந்து இந்த சகோதரியிடம் தவறாக நடக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரையும் காவல் துறையினரின் முன்னிலையிலேயே அடித்து துன்புறுத்தபட்டுளார். இது ஒரிசா மாநிலத்தில் கந்தமால் மாவட்டத்தில் பெலிகூடா பகுதியில் நடந்துள்ளது.
இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல. இந்துமத தீவிரவாதிகளே உங்களுக்கு உடன்பிறந்து சகோதரிகள் இல்லையா? உங்களை பெற்றதும் ஒரு பெண்தானே? அவர்களை விட எவ்விதத்தில் இவர்கள் குறைந்து போனவர்கள் இல்லை. இப்படி கடினமான பகுதிக்கு வ்ந்து சேவை செய்ய மருத்துவ வசதியில்லாத சாலைவசதியில்லாத படிப்பறிவில்லாத மேம்பாடு அடையாத பகுதிக்கு வந்து சமுதாய சேவை செய்யவேண்டும் என்பது என்ன அவர்கள் தலையெழுத்தா? ஏன் ஏன் கிறிஸ்துவின் அன்பினாலே நெருக்கப்பட்டவர்களாக எப்படியாயினும் இப்படிப்பட்ட மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு சென்றுள்ள சகோதரியை இப்படி கற்பழித்த கயவர்களே இந்துமத தீவிரவாதிகளே ஒன்று கேளுங்கள். கிறிஸ்தவர்களூம் இஸ்லாமிய சகோதரர்கள் மாதிரி பதிலுக்கு பதில் வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று கூவிப்பதற்காக வெகுண்டு எழுவார்கள் என நினைக்கவேண்டாம். மாறாக இன்னும் நாங்கள் மனிதர்களை நேசிக்கதான் செய்வோம். சமுதாய சேவை செய்யதான் போறோம். ஆனால் ஒன்று நிச்சயம். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். என்பதுபோல நிச்சயம் இறைவன் நீதி செய்வான்.
. அவருடைய நீதீ நியாயமாயிருக்கும். இதிலிருந்து ஒருவனும் தப்ப முடியாது.
Source from the Hindu : http://www.hindu.com/2008/09/30/stories/2008093058040100.htm
No comments:
Post a Comment