Friday, December 11, 2009

புலிகள் திரும்பி வரும் நாளை நினைத்து கலங்கி நிற்கிறதா இலங்கை கடற்படை

 

இலங்கை கடற்பரப்பின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் பொருட்டு கடற்படைக்கென இஸ்ரேலிடமிருந்து ஆறு அதிவேக தாக்குதல் படகுகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் திஸர சமரசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் இஸ்ரேலுடன் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதென்று தெரிவித்த அவர், வரும் ஜனவரியில் இந்தப் படகுகள் இங்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம் பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் சமரசிங்க கூறியுள்ளார்.

புலிகளை ஒழித்துவிட்டதாக கொக்கரிக்கும் நிலையில் இந்த படகுகளுக்கான அவசியம் குறித்து காரணம் கூறுகையில், புலிகளுடனான கடல் வழி தாக்குதல்களின் போது கடற்படைக்குச் சொந்தமான சில தாக்குதல் படகுகளை தாம் இழந்துவிட்டதால் அவற்றை ஈடு செய்து வலுப்படுத்தவே புதிய படகுகள் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.

கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்களில் விமானங்களை, ஹெலிகளை பயன்படுத்துவது தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருடனும் விமானப் படைத் தளபதியுடனும் ஆலோசித்து தாங்கள் ஆலோசிக்கின்றார்களாம். புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் மனைவியும், குடும்பத்தினரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாகவும் கூறிய அவர் அவர்கள் தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

யார் வரவை எண்ணிக் கலங்கியுள்ள இலங்கை அரசு தற்ப்போது தனது கடற்பலத்தை அதிகரித்து வருகிறது என்பது மிகுந்த கேள்விக்குறியாக உள்ளது.



source:athirvu

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails