Sunday, December 6, 2009

ராஜபக்சேவின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன்

தேர்தலில் வெற்றி பெற்றால் ராஜபக்சேவின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன்; இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் பொன்சேகா அறிவிப்பு


கொழும்பு, டிச.7-

இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான மகிந்தா ராஜபக்சேவை முன்னாள் இலங்கை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.
இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் 54-வது சிறப்பு கூட்டம் கொழும்பில் நடந்தது. இதில் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தலைமை தளபதி பொன்சேகா கலந்து கொண்டு, தனது கன்னி பேச்சை தொடங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் மகிந்தா ராஜபக்சேவின் ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட முறைகேடுகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்துவேன்.
நான் ராணுவத்தின் உயர் பதவியில் இருந்ததால் அவரது செயல்பாடுகளை தடுக்க முடியாமல் அமைதி காத்தேன். இந்த பிரச்சினை காரணமாக எனக்கும் அவருக்கும் இடையே மிகுந்த கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் பதவியை காரணம் காட்டி அப்போது நான் எதையும் பேசவில்லை.
ராஜபக்சேவின் நிர்வாகத்தில் அளவுக்கு மீறிய ஊழல் நிறைந்து இருந்தது. மக்கள் பொங்கி எழுகிற அளவுக்கு அவரது ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகள் நடந்தன. அவற்றையெல்லாம் நான் வெளியிடுவேன். அவர் செய்த பல்வேறு பாவச்செயல்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் மதித்து அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் என்று நான் உங்களிடம் உறுதி அளிக்கிறேன். நான் விரும்புவதெல்லாம் இலங்கையை ஒரு சுதந்திர நாடாக உயர்த்துவதோடு, அங்குள்ள மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழவும், சிங்கள மொழியை தாய் மொழியாக பேசவும் நடவடிக்கை எடுப்பேன். ராஜபக்சேயின் செயலற்ற நிர்வாக சீர்கேடுகளை களைந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று உயர்த்துவேன்.
தற்போதைய ராஜபக்சேவால் நல்ல நிர்வாகத்தை தர இயலாது. அவர் மக்களிடம் மாயவித்தை காட்டுகிறார். அவரது நிர்வாகம் எல்லா வகையிலும் தோல்வி அடைந்து விட்டது. இதனால் நமது நாட்டில் உள்ள குழப்பமான நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தானது.
இவ்வாறு பொன்சேகா கூறினார்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails