எய்தவனின் தலை கொய்ய தமிழனுக்கு கிடைத்த இச் சந்தர்ப்பத்தை தமிழினம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரி மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்பும் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் இதுவே சனீஸ்வரனின் வேண்டுகோளாகும். |
இது தொடர்பாக சனீஸ்வரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட அறிக்கை:- தமிழர்தம் போராட்டத்தை நசுக்கி, சின்னாபின்னமாக்கி வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கியெறிந்து விட்ட பூரிப்பில் சிங்களம் இன்று சொல்லொணா மகிழ்வில் திணறிக் கொண்டிருக்கின்றது. தமிழன் போராட்ட சக்தியை அழித்துவிட்டோம் என்ற மமதையில் தேர்தல் மேல் தேர்தலாக வைத்து சிங்களம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. தமிழரின் உணர்வோடும் உயிரோடும் இணைந்துவிட்ட மாவீரர் நாளைக் கூட அனுஷ்டிக்க விடாது பேரினவாதம் பல்வேறுபட்ட அழுத்தங்களைப் பிரயோகித்து நிற்கின்றது. தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் சிங்கள அரசின் கொடுங்கரங்கள் எங்கள் உணர்வுகளை அடக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். சிங்கள தேசம் தனது குடிமக்களாகிய தமிழர்களுக்கு வழங்கும் அற்ப சொற்ற சலுகைகள், வேலை வாய்ப்புக்கள், கடனுதவிகளைக்கூட துரோக அரசியல்வாதிகள் தாங்கள் ஏதோ அரசுடன் போராடிப் பெற்றுத் தருவது போல் பாசாங்கு காட்டுவதால் அதை நம்பும் இளஞ் சமூகம் அந்த துரோகிகளின் பாசறைகளை தேடிச் சென்று எமது வீரஞ்செறிந்த போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் அவல நிலை தோன்றியுள்ளது. சமூக ஆர்வலர்கள் இவ்விடயம் பற்றி சிந்திக்காவிட்டால் மாவீரர்களாகிய விடுதலைப் புலிகள் துரோகிகளாகவும் காட்டிக் கொடுப்போரான ஏனையோர் மகத்தானவர்களுமாக இளைஞர் மனதில் பதிய வைக்கப்படும். எதிரியின் பொலிஸ் வேலைக்கு இளஞ்சமூகம் சென்றது இதற்கு ஒரு அரிய உதாரணமாகும். மே 19 கேட்ட செய்தியின் மூலம் இடியேறு கேட்ட நாகம் போல அதிர்ந்து போயிருக்கும் தமிழினத்தின் மீது தேர்தலாக நடாத்தி வெற்றிப் பெருமிதம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது மகிந்த அன்ட் கொம்பனி அரசு. அதற்கு ஒத்தூதிக் கொண்டிருக்கின்றது கருணா அன்ட் டக்ளஸ் கொம்பனி. யாழ். மாநகர சபை, வவுனிய நகர சபை தேர்தல்களில் மக்களின் கையறு நிலையை வைத்து அரசியல் செய்து வென்றுவிடலாம் என்று கிணப்பு போட்ட அரசிற்கு ஓரளவாவது எமது மக்கள் பாடம் கற்பித்தது மகிழ்வுதான் ஆனாலும் மாநகரசபையை கைப்பற்றிவிட்டதாக அரசு தம்பட்டம் அடிக்கின்றது. வெறும் ஆயிரத்தி சொச்சம் வாக்குகளில் மேயர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். புலிகளின் ஆசீர்வாதத்தில் உருவான கூட்டமைப்பு கணிசமான வாக்குகளை எவ்வளவோ இடர்களுக்கு மத்தியில் பெற்றமை மக்கள் இன்னும் புலிகளின் பின்னால்தான் என்பதை பறை சாற்றும். பாக்குமிடமெல்லாம் வெற்றிலைக் கட்சிக்காரர்களின் சுவரொட்டிகளின் மத்தியில் எதுவித பிரசாரத்தையும் முன்னெடுக்காமல் கூட்டமைப்பு லாவகமாக வாக்குகளைப் பெற்றமை புலிகளின் தலைமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருத வேண்டும். புத்தளத்து வாக்குகள் வரும் வரையில் யாழ் மாநகரசபையில்கூட கூட்டமைப்பே முன்னணியில் திகழ்ந்தது. இதையெல்லாம் கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் மறந்துவிடக்கூடாது. அற்ப சொற்ப சலுகைகளுக்காக கட்சி தாவுதல் இனவாத அரசை ஆதரித்தல் என்றெல்லாம் சிந்தியாது தமிழன் வாழ்வியல் பற்றி, ஆயிரமாயிரமாய் இறந்த தமிழுறவுகள் பற்றி சிந்தித்து சரியான தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணம் இதுவாகும். இனவெறி அரசும் ஊது குழல்களும் பலவித சலுகைகளை எதிர்வரும் காலங்களில் தமிழர்களுக்கு வைக்கலாம். அவற்றையெல்லாம் கண்டு மனம் மாறாது மனதில் வெறியேற்றி எதிரி மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்பும் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் இதுவே சனீஸ்வரனின் வேண்டுகோளாகும். source:tamilwin |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment