Saturday, December 5, 2009

இலங்கையை கதிகலங்க வைக்கும் அமெரிக்க தமிழர்களின், இலங்கை தயாரிப்புகளை புறக்கணிக்கும் போராட்டம்


 
புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு பெரும் வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம்.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது. 

இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria's Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்அவையின் (United States Tamil Political Action Committee - USTPAC) 'இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு' (Sri Lankan Products Boycott Committee) இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது. 

"நண்பர்களே... உங்களை இந்தக் கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என நாங்கள் தடுக்கவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். ஆனால் எந்தத் தயாரிப்பிலாது 'Made in Srilanka' என்று இருந்தால் அதை அங்கேயே போட்டுவிடுங்கள். அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழரது இரத்தம் தோய்ந்திருக்கிறது!" - இந்த வலி மிகுந்த வாசகங்களைப் பார்த்த பின்னும் யார் இலங்கைத் தயாரிப்புகளை வாங்குவார்கள். 

இதையெல்லாம் பார்த்துவிட்டு கடைகளுக்குள் சென்று வரும் வெளிநாட்டவர், தாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். 

சில அமெரிக்கர்கள், "இலங்கையில் நடந்த விஷயங்களை நாங்கள் அறிவோம். இப்போது நடக்கும் அவலங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களால் எப்படி இலங்கை தயாரிப்புகளை வாங்க முடியும்" என்றும் சில அமெரிக்கர்கள் திருப்பிக் கேட்டது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. 

இந்தப் போராட்டத்தைப் பார்த்து கோபம் கொண்டு தங்களிடம் சண்டைக்கு வந்த அமெரிக்க நிறுவனங்களிடம் பொறுமையாக தங்கள் தரப்பை விளக்கிய போராட்டக்காரர்கள், இலங்கையில் செய்யப்பட்டுள்ள உங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுங்கள் என்று வலியுறுத்த அவர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். 

டாக்டர் எலீன் ஷாண்டர், டாக்டர் சோம இளங்கோவன், சிவநாதன் போன்றோர் இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்து சட்டரீதியாக வழிநடத்தி வருகின்றனர். 

அமெரிக்க நிறுவனங்கள் என்றில்லாது, இங்கையில் முதலீடு செய்துள்ள பேறு நாட்டு நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தி வருகிறார்கள் போராட்டக் குழுவினர். 

இதுதான் இலங்கையின் பொருளாதாரத்துக்கு விழப்போகும் பேரடியாகப் பார்க்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களிடம் ஈழ விடுதலைப் போராட்டத்தை கையளித்திருப்பதாக சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

 



source:tamilwin
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails