Friday, December 4, 2009

கினியா அதிபரை சுட்டுக்கொல்ல முயற்சி: காயத்துடன் தப்பினார்



கொனாக்ரி, டிச. 4-
 
கினியா நாட்டு அதிபர் கேப்டன் மவுசா டேடிஸ் காமரா. ராணுவ தளபதியாக இருந்த அவர் கடந்த ஆண்டு (2008) ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்து அதிபரானார்.
 
இந்த நிலையில் அவர் கொனாக்ரியில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்று இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உதவியாளர் அபுபக்கர் தொம்பா என்பவர் துப்பாக் கியால் சுட்டார். இதில் அதிபர் காமரா காயத்துடன் உயிர் தப்பினார்.
 
உடனே அவரை சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவரை டாகர் என்ற இடத்துக்கு விமானத்தில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails