காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும்வரை எந்திர கதியில் இயங்க வேண்டி இருக்கிறது இன்றைய வாழ்க்கைச் சூழல். இதனால் இளம் பருவத்திலேயே ஆண், பெண் இருபாலரும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக டென்சன்.
பெண்கள் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டு வேலையும் செய்ய வேண்டிய கட்டாயம். ஆண்களும் குடும்ப பாரத்தால் ஓய்வின்றி உழைக்க வேண்டிய அவசியம். இடையிடையே வரும் குடும்ப பிரச்சினைகளோ வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிவிட தொற்றிக்கொள்கிறது மன அழுத்தம். பிறகு மருந்து மாத்திரை என்று வாழ்க்கையே போராட்டமாய் நகருகிறது. ஆனால் மன அழுத்தம் என்பது வெறும் கவலையை மட்டும் கொண்ட நோய் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் அழுத்தம் அதிகரித்தால் மனநோய், மாரடைப்பு போன்ற வேறு வியாதிகள் ஏற்படும். எனவே மனஅழுத்த பாதிப்பு இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
தற்போது முன் எச்சரிக்கையாக மன அழுத்தத்தை அளவிடும் வகையில் `ஸ்ட்ரெஸ் வாட்ச்' வந்துள்ளது. இதை சாதாரண கடிகாரம்போல கையில் அணிந்து கொண்டு எந்த வேலையையும் செய்யலாம். இந்த கருவியானது உடலில் ஏற்படும் மாற்றங்களை (வெப்ப மாற்றத்தை)சென் சார்கள் மூலம் கண்காணிக்கும். அழுத்தத்தை குறிப்பிட்டு வெவ்வேறு அளவீடுகள், பல வண்ணங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அவ்வப்போது காட்டும் அளவுக்கு ஏற்ப மருந்து உட்கொண்டு அழுத்தத்தை குறைத்து மன இறுக்கமின்றி வாழ்க்கையை தொடரலாம். மேலைநாடுகளில் விற்பனைக்கு வந்துள்ள இதன் பெயர் `ஸ்ட்ரெஸ் சென்சார் வெஸ்ட்' எனப்படும்.
source:dailythanthi
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment