Wednesday, January 7, 2009

கிளிநொச்சியை மீண்டும் பிடிப்போம்: விடுதலைப்புலிகள் அரசியல்பிரிவு தலைவர் நடேசன் பேட்டி

 

கொழும்பு, ஜன. 7-

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் ப.நடேசன் அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

ஈழத்தமிழர்கள் யாரு மற்ற அனாதைகள் அல்ல. அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது 7 கோடி தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்துகுரல் கொடுப்பார்கள்.

கிளிநொச்சியை ராணு வம் பிடித்துள்ளதை விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக நாங்கள் பார்க்க வில்லை. போரில் இழப்புகளை குறைப்பதற்காக பின் வாங்கி செல்வது என்பது ஒரு தந்திரம். கிளி நொச்சி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்றது இது முதல்தடவை அல்ல. கிளிநொச்சியை பல தடவை ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளது. நீண்டகாலம் அதை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்.

இது தான் வரலாறு. கிளிநொச்சியை மீண்டும் பிடிப்போம். தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கவே இலங்கை அரசு நினைக்கிறது.

கிளிநொச்சியில் உள்ள மக்கள் இப்போது வன்னி பகுதியில் பாதுகாப் பான இடத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இழந்த பகுதிகளை விடுதலைப் புலிகள் மீண்டும் கைப்பற்று வார்கள்.

இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவிக ளை நிறுத்தி எங்கள் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். உலக தமிழினம் ஒன்றுபட்டு எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு நடேசன் கூறினார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails