Wednesday, January 7, 2009

சத்யம் நிறுவன தலைவர் திடீர் ராஜினாமா: பங்குசந்தை கடும் சரிவு

 
 
 
 
 
 
Imageசத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்  தலைவர் ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனை அடுத்து  பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 600 குறைந்தன.சத்யம்  நிறுவன பங்குகள் ரூ.188-லிருந்து ரூ.50 ஆக குறைந்தது.
முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களில் சத்யம்மும் ஒன்றாகும்.இதில் கடந்த சில மாதங்களாக நிர்வாகப் பிரச்சினை நிலவி வந்தது.இதனால் பெரும் பாதிப்புக்கு சத்யம் நிறுவனம் உள்ளாகலம் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில்  சத்யம் நிறுவனத்தின்  நிறுவனரும்,தலைவருமான ராமலிங்க ராஜூ இன்று அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
சத்யம் நி்ர்வாகப் பதவியிலிருந்து விலகுவதாக நிவாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். .மேலும் இதுவரை சத்யம் நிறுவனத்திடம் கையிருப்பாக இருப்பதாகக் கூறப்பட்ட ரூ. 5,040 கோடி உண்மையில் கையிருப்பில் இல்லை என்றும், அது நிறுவனத்தின் கணக்கில் திரித்துக் காட்டப்பட்ட பணம் என்றும் ராமலிங்க ராஜு ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சத்யம் நிறுவனம் ரூ. 2,700 கோடி கையிருப்பில் உள்ளதாகக் காட்டியது. ஆனால், உண்மையில் இருந்த பணம் ரூ. 2,112 கோடி தான். இந்த உண்மை போர்ட் உறுப்பினர்களுக்குக் கூட தெரியாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சத்யம் நிறுவனத்தின் இடைக்கால செயல் அதிகாரியாக ராம் மையாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சதயம் நிறுவனத்தின் நிர்வாகிகள் கூட்டம் வரும் 10-ந் தேதி நடை பெற உள்ள நிலையில் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்ப்டத்தக்கது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails