Friday, January 2, 2009

எந்த நேரமும் கிளிநொச்சி வீழ்ந்துவிடும்; சரணடைந்து விடுங்கள்: புலிகளுக்கு கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள்

எந்த நேரமும் கிளிநொச்சி வீழ்ந்துவிடும்; சரணடைந்து விடுங்கள்: புலிகளுக்கு கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள்
 
கிளிநொச்சியை மும்முனைகளில் துண்டித்துள்ள நிலையில் எந்த நேரமும் கிளிநொச்சி சிறிலங்கா படையிடம் வீழ்ந்துவிடும் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகள் உடனே சரணடைய வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரந்தன் மற்றும் இரணைமடு சந்திகளை படைத்தரப்பு கைப்பற்றியதாக அறிவித்ததைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச, சில நாட்களில் கிளிநொச்சி வீழ்ந்துவிடும் என்றார்.
"மேலும் எஞ்சியுள்ள புலிகளின் நிலைகளும் எதிர்வரும் சில மாதங்களில் அழித்துவிடப்படும். கிளிநொச்சியைப் பிடித்துவிடலாமென சிறிலங்கா படை பகல் கனவு காண்பதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார். ஆனால் விரைவில் உண்மை என்னவென தெரியவரும். பரந்தனும் இரணைமடு சந்தியும் வீழ்ந்துவிட்டதால் அழிவை எதிர்கொள்வதா? அல்லது சரணடைவதா? என்பதை புலிகள் முடிவு செய்ய வேண்டும்" என்றும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails