|
|
இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வான்வழி தாக்குதலோடு பீரங்கித் தாக்குதலையும் ராணுவம் மேற்கொண்டுள்ளது. காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18-தினங்களாக நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக்குக் கொண்டு வரும் விதமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் இயக்கத்தினர் மேற்கொள்ளும் ராக்கெட் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வரவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.தெற்கு காஸா நகரில் தல் அல்-ஹவா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தரைப்படையினர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனர்.இவர்களுக்குப் பாதுகாப்பாக வான்வழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுள்ளது. இதனிடையே காஸா நகரில் இரண்டு பீரங்கிகளை தகர்த்துவிட்டதாக ஹமாஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கித் தாக்குதலை முறியடித்து வருவதாகவும் தெரிவித்தனர்.இரவு நேரத்தில் இப்பகுதியில் நடைபெறும் சண்டையால் பெரும் தீப்பிழம்பு ஆங்காங்கே காணப்பட்டதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இதனிடையே பீரங்கித் தாக்குதலில் ஒரு பாலஸ்தீனர் உயிரிழந்ததாக தெரிகிறது.உயிரிழந்தவர் பற்றிய விவரம் தெரியவில்லை. மேலும் விமான தாக்குதலில் 3-பேர் காயமடைந்ததாகவும்,காஸா நகரில் உள்ள ஷேக் ராட்வான் மாவட்டத்தில் ஒரு வீடு முற்றிலும் சேதமடைந்ததாகவும் தெரிகிறது. |
No comments:
Post a Comment