|
காயம் ஏற்பட்ட நிலையிலும் துணிச்சலாக பேட் செய்த தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித்தை, பாண்டிங் வெகுவாக பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியா சென்ற தென் ஆப்ரிக்கா அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது. முதலிரண்டு 2 டெஸ்ட்டில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. முதல் இன்னிங்சில் கைவிரல் காயத்தால் பாதியில் வெளியேறிய தென் ஆப்ரிக்கா கேப்டன் ஸ்மித், இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் விழுந்த நிலையில் கடைசி விக்கெட்டாக களமிறங்கினார். ஆட்டத்தை எப்படியும் டிராவில் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடினார். ஆனாலும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதுகுறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் கூறியது: சிட்னியில் இறுதி நாளில் கடைசி சிலமணி நேரம் குறித்து மிகவும் வருத்தப்பட்டேன். ஏனெனில் மழை வரும் போல இருந்தது தான் காரணம். இன்னும் எத்தனை ஓவர்கள் வீசப்படும் என எண்ணிக் கொண்டு இருந்தேன். இந்த டெஸ்டில் எல்லோரும் கடினமாக போராடினோம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அதனால் தான் வெற்றி பெற்றுள்ளோம். ஸ்மித்துக்கு பாராட்டு: சிட்னி டெஸ்டில் ஸ்மித் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். இதனை அனைத்து அணிகளும் தெரிந்து கொள்ள வேண்டும். காயம் ஏற்பட்டு, சோர்வான நிலையிலும், மருத்துவர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல் மீண்டும் களமிறங்கிய அவர், தனது வேலையை சரியாக செய்தார். அவரது உறுதியான போராடும் குணத்தை நேரில் பாராட்டினேன். போட்டியில் ஸ்மித்தின் துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன். இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார். |
No comments:
Post a Comment