பளையில் இருந்து முன்னேறிச் செல்லும் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து நலிந்த குமாரசிங்க சென்றபோது புலோப்பளையில் பொறிவெடியில் சிக்கி கொல்லப்பட்டார். இவரது ஜீப் வாகனம் சேற்றுப்பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த போதே பொறிவெடி வெடித்துள்ளது. இவருடன் சமிக்ஞை அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். லெப். கேணல் நலிந்த குமாரசிங்க எயார் மொபைல் பிரிகேட்டின் 5 ஆவது கெமுனு வோச் பற்றாலியன் தளபதியாக விளங்கியவர். இந்த எயார் மொபைல் பிரிகேட்டானது 53 ஆவது படைப்பிரிவின் ஒரு பகுதியாக செயற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லெப்.கேணல் நலிந்த குமாரசிங்க திறமையான சிறிலங்கா படைத்தளபதியாக விளங்கியதுடன் படையினருக்கு தலைமைத்துவத்தினையும் வழங்கி வந்தார். இவரே அண்மைய நாட்களில் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட அதியுயர் நிலை அதிகாரி ஆவார். இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையில் கடந்த நான்கு நாட்களில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 55 பேர் காயமடைந்துள்ளனர். |
Friday, January 9, 2009
புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா படை அதிகாரி பலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment