நிïயார்க், ஜன. 16-
அமெரிக்காவின் நிïயார்க் நகரில் இருந்து கார் லோட்டி நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர்பஸ் 320 ரக விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 6 சிப்பந்தி கள் உள்பட 155 பேர் இருந்தனர். அந்த உள்நாட்டு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் இறகுகள் மீது பறவைகள் மோதியது. இதில் விமானத்தின் இறகுகள் சேதம் அடைந்ததுடன் என்ஜினுக்குள் அந்த பறவைகள் சிக்கிக் கொண்டன.
இதை அடுத்து விமானம் தாறுமாறாக பறக்கத் தொடங்கியது. பறவை மோதியது பற்றி விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். கோளாறு ஏற்பட்டு தாறு மாறாக பறந்த அந்த விமானத்தை விமானி சாமார்த்தியமாக மான்ஹாட்டன் அருகே தரை இறக்க முயன்றார்.
ஆனால் விமானம் அங்குள்ள ஹட்சன் ஆற்றில் விழுந்தது. ஆற்றில் விழுந்த விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே குதித்தனர். சிலர் தண்ணீரில் பாதி அளவு மூழ்கியபடி மிதந்த விமானத்தின் இறகுகள் மீது ஏறி நின்று கூக்குரல் போட்டனர். மீட்பு படையினர் உடனடியாக வந்து பயணிகள் அனைவரையும் மீட்டனர். உயிர் தப்பியவர்களில் ஒரு குழந்தையும் இருந்தது நல்ல வேளையாக இந்த விபத்தில் யாரும் உயிர் இழக்கவில்லை.
No comments:
Post a Comment