Sunday, October 5, 2008

இந்தியாவின் புகழுக்கு களங்கம்:பிரதமர்

 
 
lankasri.comஒரிசா மற்றும் கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் இந்தியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், தமது அமெரிக்க பயணத்தின்போது இந்த விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக குறிப்பிட்டார்.

ஐரோப்பிய யூனியன் தலைவரும், பிரான்ஸ் அதிபருமான நிகோலஸ் சர்கோஸியும், தன்னிடம் இது குறித்து வருத்தம் தெரிவித்ததாக பிரதமர் கூறினார்.

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் தேசிய அவமானம் என்றும், இதனால் வெளிநாடுகளில் இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரிசா மற்றும் கர்நாடக மாநில கலவரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இந்த தகவல்களை மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் தாஸ்முன்ஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே, இந்த பிரச்னை குறித்து காங்கிரஸ் உயர்நிலை தலைவர்களின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails